பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சுவாரஸ்யம் நிறைந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருந்தது. ஆரம்பத்தில் நல்லவர்களாக பார்க்கப்பட்டவர்கள் நாட்கள் செல்ல செல்ல மக்களின் வெறுப்புக்கு ஆளானார்கள். எல்லா சீசனிலும் இருப்பதை போலவே இந்த சீசனிலும் கேளிக்கும், பாட்டுக்கும், காதலுக்கும், நட்புக்கும், பிக்பாஸுக்கே உரித்தான சண்டைக்கும் சிறிதும் பஞ்சம் இல்லாமல் நாட்கள் கடந்தன.
இந்தநிலையில் யார் வெற்றியாளராக முடிசூட்டப்படுபவர் என்ற கேள்விக்கு விடைக்கிடைக்காமலேயே இறுதி நாட்களை எட்டியது பிக்பாஸ் சீசன் 7. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் ஒயில்டு கார்டு மூலமாக வீட்டுற்குள் நுழைந்து ஆரம்பத்தில் எல்லாவற்றிக்கும் அழத்தொடங்கினாலும் போக போக விளையாட்டின் நுணுக்கம் நன்கு அறிந்துகொண்டாரோ என்னவோ சனி, ஞாயிறு என்று வார இறுதி எபிசோடுகளில் அர்ச்சனா.. என்று கமல் அழைத்தாலே, பிக்பாஸ் அரங்கமே அதிரும் அளவிற்கு அர்ச்சனாவிற்கு பார்வையாளர்களின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது.
இப்படியெல்லாம் தனது பிக்பாஸ் பயணத்தின் பாதைகளை செதுக்கிய அர்ச்சனா அவரின் வாழ்க்கையில் என்னனென்ன பாதைகளை கடந்து தற்போது பிக்பாஸ்க்கு வந்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த அர்ச்சனாவிற்கு தற்போது வயது 32. அர்ச்சனாவின் தந்தை ரவிசந்தர், தாய் ஜெயந்தி , சகோதாரி அக்ஷயா. இவர்கள் அனைவரும் தற்போது மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
அர்ச்சனாவின் தந்தை ஒரு தமிழ் பேராசிரியர். இவர் தனது மகள் அர்ச்சனா என்றைக்கும் தமிழை முதன்மையாக கொண்டிருக்கவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்துள்ளார். இதனாலேயே பள்ளிப்பருவங்களில் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் அர்ச்சனாவிற்கு போட்டிக்கான வசனங்களை அர்ச்சனாவை வைத்தே எழுத வைத்தும் பிறகு அதனை திருத்தி கொடுப்பதும் வழக்கமாக வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்காகவே பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் புத்தகங்களை வாங்கி கொடுத்துவிடுவாராம்.. இதனாலேயே சிறுவதில் இருந்தே புத்தகங்கள் அதிகம் படிக்கும் பழக்கம் கொண்டவராக மாறியுள்ளார் அர்ச்சனா.
பிறகு சிறுவயதிலேயே தனது மகள் நன்கு பாடும் திறமை கொண்டவர் என்பதை அறிந்த அர்ச்சனாவின் தந்தை 10 வருடங்கள் தனது மகளை கர்நாட இசையில் பயிற்சி பெற வைத்துள்ளார் .
இதனால் பாடலின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அர்ச்சனா தான் 6 ஆம் வகுப்பு படிக்குபோது எப்படியாவது சூப்பர் சிங்கர் ஜீனியரில் பங்கேட்க வேண்டும் என்று முயற்சித்து அதில் கலந்து கொள்ளவே அவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
கிடைத்த வாய்ப்பில் தோல்வியை தழுவினாலும் படிப்பில் தனது கெட்டிக்காரத்தனத்தை விடவில்லை.. அதன்படி, 10 ஆம் வகுப்பில் 500 க்கு 491 மதிப்பெண்ணும், 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்த அர்ச்சனா 1200 க்கு 1005 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தனது மகள் நன்கு படிப்பதை உணர்ந்திருந்த அர்ச்சனாவின் தந்தை ..அர்ச்சனாவை மருத்துவராக்கவும், (அ) ஐஏஎஸ் ஆகவும் ஆக்க வேண்டும் என நினைத்துள்ளார்.
ஆனால் , ‘ எனக்கு சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும்’ என்று அர்ச்சனால் கூறவே அப்பாவின் சம்பந்தத்துடன் மீடியாவில் நுழைய முயற்சிக்கிறார். மேலும் மற்றொருபுறம் இன்ஜினயரிங் கல்லூரியிலும் தனது கல்லூரி படிப்பை முடித்து விடுகிறார்.
தான் கல்லூரி படிக்கும் காலங்களில் கல்லூரியில் கிடைக்கும் எல்லா கலைநிகழ்ச்சிகளிலும் தவறாமல் அர்ச்சனா கலந்து கொள்வது வழக்கம். வகுப்புகளில் அதிகம் இருப்பதைவிட கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேரம் செலவிடுவதுதான் அதிகம் என்று அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இப்படி ஒருநாள், தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘குயின் ஆஃப் டிஜிட்டல்’ மீடியா’ என்ற ஆடிசனில் கலந்து கொண்டு அதில் விஜேவாக அறிமுகமாகி, வார நிகழ்ச்சிகள் சிலவற்றை தொகுத்து வழங்கவும் ஆரம்பித்துள்ளார். மேலும் ஹலோ எஃப்ம் நடத்திய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இதன்பிறகு ’கனவே கனவே’ என்ற வெப்சீரியலுக்கு ஆடை ஒன்று வாங்க மகிழம் என்ற போட்டிக்கு சென்ற அர்ச்சனா நடிகர் கலையரசனை.. அந்த கடையில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போதுதான் தெரிந்தது அக்கடை நடிகர் கலையரசனின் மனைவி நடத்தும் கடையென்று.
இவர் கலையரசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மூலமாக தனியார் தொலைக்காட்சி சீரியல் ராஜா ராணி சீரியல் 2 ல் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
இதில் நடித்து கொண்டு இருக்கும்போது இதிலிருந்து விலகியவர் அதே தொலைக்காட்சியில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்று புகழோடு சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதுவும் 2 எபிசோடுகளில் நிறைவடைந்துவிடவே, பிறகு பிக்பாஸ் சீசன் 7 க்கு நுழையும் வாய்ப்பு அர்ச்சனாவிற்கு கிடைத்தது. ஆனால் இதற்கு அர்ச்சனாவின் தந்தை ஒத்துக்கவில்லை.
இறுதியில் தன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று பிக்பாஸ் சீசன் 7 க்குள் நுழைந்த அர்ச்சனா தற்போது பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளராக முடி சூட்டப்பட்டுள்ளார்.