"நாலுமே Flop-uhh" - தமிழ் நிகழ்ச்சியில் பிரபலமாகி ஹிந்தி பிக்பாஸில் அசத்தும் நடிகை! யார் இவர்?

தமிழ் நிகழ்ச்சியில் பிரபலமாகி ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசத்திக் கொண்டிருக்கிறார், நடிகை ஒருவர். யார் அவர்?.. பார்க்கலாம்..
ஸ்ருதிகா
ஸ்ருதிகாpt web
Published on

செய்தியாளர் - புனிதா பாலாஜி

முகம் மலர்ந்த சிரிப்பு... நடனமாடும் கண்கள்... ரசிக்க வைக்கும் வெகுளித்தனமான பேச்சு... இதுதான் ஸ்ருதிகாவின் அடையாளம்.. சும்மா என்ற ஒற்றை வார்த்தையை இந்தி தொலைக்காட்சி உலகில் முனுமுனுக்க வைத்திருக்கிறார், தமிழகத்தை சேர்ந்த நடிகை... வசந்தபாலனின் ஆல்பம், சூர்யாவின் ஸ்ரீ, ஜீவாவின் தித்திக்குதே, மாதவனின் நள தமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்...

நீண்ட இடைவெளிக்கு பின் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான ஸ்ருதியின் பேட்டிகள், இன்ஸ்டா ரீல்ஸ்களில் ட்ரெண்ட் ஆனது.. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றிருக்கிறார், ஸ்ருதிகா..

ஒவ்வொரு சீசனின் முதல் நாளில், ஓவ்வொரு போட்டியாளராக மேடையேற்றி அவர்களை பற்றிய விவரங்களை விரிவாக சொல்வது நிகழ்ச்சியின் வழக்கம்.. அப்படி, தொகுப்பாளர் சல்மான் ஸுருதிகாவைப் பற்றி கேட்டபோது, தான் நடித்த 4 படங்களும் மோசமான தோல்விப் படங்கள் என கிண்டலாகச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டார்..

முதல் நாளே பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார், ஸ்ருதி.. நிகழ்ச்சி படமாக்கப்படும் வீட்டிற்குள் ஹிந்தி மொழியில் பேசிக் கொண்டிருந்த ஸ்ருதி, திடீரென "சும்மா" என்றொரு வார்த்தையை பயன்படுத்தினார்.அதற்கு "சும்மா" என்றால் என்ன என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் வெகுளித்தனமாக அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துவிட்டது. தமிழ் சினிமாவில் இருந்து பிறமொழி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாகியிருக்கும் ஸ்ருதிகாவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com