BIGG BOSS DAY 3 | “நீங்கள் செய்வதெல்லாம் சரியென்று சொல்ல முடியாது” - பவாவின் கதையால் வந்த வினை!

பவா கூற வந்த கருத்திற்கும், கூறிய விதத்திற்கும் நிறைய வேறுபாடு காணப்பட்டதால், அனைவராலும் அதை சரி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Bigg Boss S7 Tamil Day 3
Bigg Boss S7 Tamil Day 3Biggboss
Published on

பிக்பாஸ் மூன்றாம் நாளான நேற்று… ஆரம்பமே பிரச்னையுடன்தான் ஆரம்பித்தது. யுகேந்திரன் அடுப்பு பற்றவைக்கமுடியாமல் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களின் அனுமதி வாங்க நினைத்து திணறியபடி நிற்க… சமய சஞ்சீவியாக அங்கு வருகிறார் மணிச்சந்திரா. ‘அடுப்பு பற்றவைக்க அனுமதி கொடுங்க’ என்று யுகேந்திரன் பரிதாமபாய் அவரிடம் கேட்க சற்று பில்டப் கொடுத்து அனுமதி கொடுக்கிறார் மணிச்சந்திரா.

யுகேந்திரன்
யுகேந்திரன் Biggboss

“மணி இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவரா இல்லையா…. அடுத்தமுறை நீங்க் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றால், உங்க நிலைமை…” என்று நமக்கு எண்ணம் வருவதை தடுக்கமுடியவில்லை. ”நூடூல்ஸ்க்கு ஹெல்ப் பண்ணபோய் நூடூல்ஸாகிட்டியே குமாரு” என்று யுகேந்திரனையும் விதிமீறல் விசித்திரா என்று விசித்திராவையும் ஸ்மால் பாஸ் கலாய்ப்பது சரிதான். Wanted-ஆ வண்டியில் ஏறியவர்கள் தானே இவர்கள்?

Bigg Boss S7 Tamil Day 3
BIGGBOSS Day 2: சண்டை STARTS..! இன்னிக்கு என்ன சம்பவம் நடந்துச்சு?

அப்பப்பா…. ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்களுக்குதான் என்ன வேலை என்ன வேலை… இதுல கூல் சுரேஷ் ‘எல்லாருக்கும் இரண்டு சப்பாத்திதான்’ என்றால், சைடிஷ் மிச்சமிருக்கு என்று மேலும் இரண்டு சப்பாத்தி கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்.

மாயா கூல்சுரேஷிடம் வலுகட்டாயமாக சண்டைக்கு வருவது, வடிவேலு, ”நீ வேணும்னா…ச…ண்…டை…க்கு வாடா…” என்று கூப்பிடுவது போல் இருந்தது. “சரி வெவகாரம் பெருசா போகுது, நாம கம்முன்னு இருந்துடுவோம்” என்று கூல் சுரேஷ் இருக்கும் சமயத்தில், மூக்குடைப்பட்ட மாயா, கோவத்தில் “நீங்கல்லாம் அவ்வளவு சீன் இல்ல…” என்று கூறி செல்கிறார்.

கூல் சுரேஷ்
கூல் சுரேஷ்Biggboss

இந்த வார்த்தை விஷ்ணுக்கு கோவத்தை உண்டாக்க, “ஏன் நீங்க சீன் போடலையா…? “ என்று பதிலுக்கு கேட்க, மாயா விட்ட ராக்கெட் பாதை மாறி விஷ்ணு மேல் பாய்ந்தது. மாயாவிற்கும், விஷ்ணுவிற்கும் வாக்குவாதம் நடந்தது. அச்சமயம் அந்த இடத்தை விட்டு கூல் சுரேஷ் நைசா எஸ்கேப்.

அதேபோல் கூல் சுரேஷ் மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்க்கு தாமதமாக வர, கோபம் கொண்ட விசித்திரா, சாப்பாடு இல்லை என்று கூறவும், “தமிழன் சாப்பிடுறவன் இல்ல… சாப்பாடு போடுறவன், தமிழண்டா…” என்று கத்துகிறார். பதிலுக்கு விசித்திராவும், “நான் தமிழச்சிடா…” என்று கத்துகிறார். இல்ல புரில மொமன்ட்!

இச்சமயத்தில் யுகேந்திரன் கூல் சுரேஷிடம், “சாம்பார் ஆறி போச்சு, சூடு பண்ணனும்” என்று சொல்லவும், எங்கே அதுவும் கிடைக்காமல் போய்விடப் போகுது என்று நினைத்த கூல் சுரேஷ், “பரவாயில்ல… அப்படியே ஊத்துங்க நான் சாப்பிட்டுக்கிறேன்” என்கிறார்.

மதியம் மாயா விவகாரத்தை பற்றி, கூடி கும்பல் போட்டு பேசும் சமயத்தில், விஷ்ணுவிற்கு ஒரு விளக்கத்தையும் தருகிறார் கூல் சுரேஷ்.

விஷ்ணு
விஷ்ணுBiggboss

“அதாவது பதிலில் இரண்டு வகை உண்டு. உதாரணத்துக்கு, ‘சாப்பிட்டீர்களா?’ என்ற கேள்விக்கு சாப்பிட்டேன் என்பது ஒருவகை பதில். இதே கேள்விய நமக்கு பிடிக்காதவங்க கேட்கும் பொழுது ‘ஏன் நீ வாங்கி தரப்போறீயா’ என்று சொல்லி பதில் கேள்வி கேக்குறது இன்னொருவகை பதில்” என்று பதில் குறித்து ஒரு டிக்ஷ்னரியே எழுதி விட்டார் கூல் சுரேஷ்.

இதன் நடுவில் பூர்ணிமா, தான் டாட்டு குத்திக்கொண்ட கதையை சொல்கிறார். இவர் டாட்டூ குத்திக்கொண்டதற்கு பாரதியார்தான் காரணமாம். பூர்ணிமா படிக்கும் சமயத்தில் பாரதியார் கவிதையை விரும்பி படிப்பாராம், அதில் பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்றும் பெண்விடுதலை பற்றியும் கூறியது பூர்ணிமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனாலும் இளைய சமுதாயம் பெண்களுக்கான உரிமையை கொடுக்கவில்லை. ‘இந்த காண்டில்தான் என் கையில் இருந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பாரதியாரின் உருவத்தை டாட்டுவாக குத்திக்கொண்டேன்’ என்று கூறியவர், பாரதியாரின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் என்ற கவிதை ஒன்றையும் கூறினார். இதற்காக அவருக்கு நம் சார்பாக சபாஷ் ஒன்றை கூறலாம்.

பூர்ணிமா
பூர்ணிமா Biggboss

அடுத்ததாக கதை நேரம். எல்லோரும் அமர்ந்திருக்க பவா செல்லத்துரை கமல்ஹாசன் சம்பந்தபட்ட கதை ஒன்றை கூறுகிறார். கமல்ஹாசனின் அப்பா வக்கீல் சீனிவாசனுக்கு, ஜெயகாந்தன் கதை என்றால் மிகவும் பிடிக்குமாம். விரும்பி படிப்பாராம். அதனால் கமல்ஹாசன் தனது நற்பணி மன்ற விழாவிற்கு ஜெயகாந்தனை விருந்தினராக வருமாறு அழைத்திருந்தார். ஆனால் ஜெயகாந்தன் வர மறுத்திருக்கிறார். ஆனாலும் கமலின் வற்புறுத்தலால் விழாவிற்கு வந்திருக்கிறார் ஜெயகாந்தன்.

அரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு அமர்ந்திருந்த ஜெயகாந்தன், கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். இதைக் கண்ட ரசிகர்களுக்கு ஜெயகாந்தன் மேல் பயங்கர கோபம், “எங்கள் தலைவரின் முன் நீங்கள் கால் மேல் கால் போடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது” என்று ஜெயகாந்தனை கேட்க, கோபம் கொண்ட கமல்ஹாசன், “இது அவர் கால். அவர் அவரின் கால்மேல் கால் போட்டுக்கொள்வது அவரின் விருப்பம், இதில் எனக்கும் பிரச்னை ஏதும் இல்லை. ஆகையால் இவரை குறை கூறிய ரசிகர் இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்“ என்று கூறவும், அடுத்த சில நிமிடங்களில், கால் இல்லாத ரசிகர் ஒருவர் மேடைக்கு வந்து ஜெயகாந்தனிடம் மன்னிப்பு கேட்டதுடன், “என் கால்தான் சார் அவர்” என்று கூறியதாக பவா செல்லதுரை கூறினார். இக்கதையை கமலின் அனுமதியுடன் ‘கால்’ என்ற கதையாக தான் எழுதியதாகவும் கூறினார் பவா.

பவா செல்லத்துரை
பவா செல்லத்துரைBiggboss

இந்த கதை போக, இன்னொன்றையும் கூறினார் பவா செல்லத்துரை. அதில் பிரபல மலையாள எழுத்தாளரான பாலச்சந்திரன் என்பவர், தன் வீட்டுக்கு வரும் ஒரு பெண்ணின் இடுப்பழகில் மயங்கி அவரின் இடையை தொட்டதாகவும், அதில் அப்பெண் கோபம் கொண்டு அந்த எழுத்தாளரின் வலது கன்னத்தில் ஓங்கி அடித்ததாகவும் சொன்னார் அவர். அதில் அப்பெண்ணின் இடுப்பை, வழுக்கும் வெண்ணைகட்டி என்று வர்ணித்தார் பவா. இந்த வார்த்தை அங்கிருந்த போட்டியாளர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. அசௌகரியத்தை கொடுத்தது. அவர்கள் எதிர்க்கத் தொடங்கவே, ஒருகட்டத்தில் அனைவரும் அவரை எதிர்க்க ஆரம்பித்தனர்.

ப்ரதீப்
ப்ரதீப் Biggboss

அச்சமயம் இதுதான் சாக்கு என்பது போல ப்ரதீப் அவரிடம், “அதேபோல் நீங்கள் ஆங்காங்கே எச்சில் துப்புவது எனக்கு பிடிக்கவில்லை. அதை சுத்தம் செய்பவர்களுக்கு மிகவும் கஷ்டம், ஆகையால் இக்குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார். இது பவா செல்லத்துரைக்கு அவமானமாக போய்விட்டது. சடாரென்று “என்னால் முடியாது, நான் அப்படித்தான்” என்று பதிலளித்தார். இது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு பேசு பொருளானது.

விசித்திரா ஒருபடி மேலே சென்று அவரிடம், “நீங்க பெரிய எழுத்தாளராக இருக்கலாம். அதற்காக நீங்கள் செய்வதனைத்தையும் சரி என்று சொல்ல முடியாது. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு நல்ல கதைகளை சொன்னால் அதிலிருந்து நல்ல விஷயத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். மாறாக இதே போல் எதிர்மறையான கதையை சொன்னால், அது நல்லதல்ல..” என்றார். சரிதான்!

ஜோவிகா பவாவிடம் சென்று, “நீங்கள் கூறியது எனக்கு எதுவுமே புரியவில்லை, நீங்கள் என்ன சொல்ல வறீங்க” என்று கேட்டார். பாவம் குழந்தை!

ஜோவிகா
ஜோவிகா Biggboss

பவா பொறுமையாக அவரிடம், “அதாவது உலகத்தில் உள்ள அனைவரும் 100 சதவிகிதம் நேர்மையானவர்கள் கிடையாது. அவர்களுக்குள்ளும் ஒரு டார்க் பக்கம் இருக்கும். அதை அனைவரும் மறைக்கத்தான் பார்ப்பார்கள். ஆனால் பாலச்சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் சில பேர்தான் அப்படியே எழுதுவார்கள். அதை சொல்லவந்தேன்” என்றார். ஆனால் பவா கூற வந்த கருத்திற்கும், கூறிய விதத்திலும் நிறைய வேறுபாடு காணப்பட்டதால், அனைவராலும் அது சரி என்று ஏத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் தந்த விளக்கத்தை கேட்க மறுத்து “போதும் சார், இதை நிறுத்திக்கோங்க” என்று சொல்லிவிட்டார் ப்ரதீப்.

அதே போல் தானும் வெளிப்படையான எழுத்தாளன் என்பதற்கு சாட்சியாய் அவரின் கதை ஒன்றையும் கூறினார். “நான் சிறு வயதாக இருக்கும் சமயம் எங்கள் அம்மா ஒருமுறை கோழியை அடித்து குழம்பு செய்தார்கள். கோழியின் இறக்கைகள் கால்கள் போன்றவற்றை ஒரு குழி தோண்டி புதைத்துவிட்டு அதன் மேல் சாணி பூச்சையும் பூசினர். சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டில் இருந்த ஒரு அம்மா அவர்கள் வீட்டு கோழியை காணோம் என்று என் அம்மாவிடம் கேட்டார்கள். என் அம்மாவும் அதுபற்றி தெரியாது என்று கூறி அந்த அம்மாவுக்கு தான் வைத்த கோழி குழம்பையும் சாப்பிடச்சொல்லி தந்தார்கள். ஆனால் அம்மா அடித்து குழம்பு வைத்த கோழி பக்கத்து வீட்டு கோழிதான். இது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் என் அம்மா பொய் சொன்னதுடன், எதுவும் நடக்காதது போல் அவர்கள் கோழியை அடித்து குழம்பு வைத்து அவர்களிடமே தந்தது தான் ஹைலைட்” என்றார்.

பவா செல்லத்துரை
பவா செல்லத்துரைBiggboss

இக்கதையை கேட்ட ஹவுஸ்மேட்ஸ், மீண்டும் முகம் சுளித்தனர். ”ஏன் நீங்கள் சொல்லி இருக்கலாமே… உங்கள் வீட்டு கோழிதான் குழம்பில் இருக்கிறது என்று…“ என்று சொல்லவும் பவா செல்லத்துரையால் சரியான பதிலை அவர்களுக்கு தெரிவிக்க இயலவில்லை. நகைச்சுவையாய் அவர் சொன்னது, மீண்டும் வினையானது!

ஒரு எழுத்தாளர், தான் என்ன சொல்லவேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை தீர்மானம் செய்துக்கொண்டு பேசவேண்டும். இது நம்மைவிட பவா அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பார்க்கப்படும் பிக்பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியில், எழுத்தாளர் ஒருவர் கலந்துகொண்டார் என்பது பாராட்டுக்குரிய செய்தியாக பார்க்கப்படும் நேரத்தில், இப்படி எதையாவது பேசி இளம் தலைமுறையினரிடம் பவா செல்லத்துரை போன்றோர் பேச்சு வாங்குவது… சங்கடம்தான்! பார்ப்போம், நாளை என்ன நடக்கிறதென்று!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com