பிக் பாஸ் சீசன் 7-ல் நேற்று ஒரே நாளில் பல சம்பவங்கள் நடந்து பல கண்டெண்டுகளை அள்ளி வீசி இருக்கிறார்கள். அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
என்னதான் ரவீனாவும், மணியும் நெருங்கிய நண்பர்கள் ஆனாலும் இருவருக்குள்ளேயும் பொசஸிவ் இருப்பது நன்றாகவே தெரிகிறது. மணி ஐஷூவிடம் பேசினால் ரவீனாவுக்கு பிடிப்பதில்லை. அதேபோல் ரவீனா சிலபேரிடம் பேசினால் மணிக்கு பிடிப்பதில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த மணி ரவீனாவை கூப்பிட்டு ஒரு மாதிரி மந்திரித்துவிட்டு அனுப்புகிறார்.
“ இந்தாப் பாரு, நீ இங்க இருக்குறவுங்க யார்கிட்டேயும் அளவுக்கு அதிகமாக பேசாதே.. நான் உன்னை நிறைய இடத்துல நோட் பண்றேன். நீ இந்த வீட்ல உள்ளவங்ககூட ஒரு மாதிரி பார்த்துட்டு அவங்க கூட கனெக்ட் ஆகுற, அது ப்ரண்ட்லியா, பிரதரா, சிஸ்டரா கூட இருக்கலாம். ஆனால் அப்படி கனெக்ட் ஆகாத… எனக்கு பிடிக்கல… என்கிறார்.”
ரவீனாவுக்கு , மணி சொல்ல வருவது புரிகிறது. ஆனாலும் அவர் யாரை சொல்கிறார் என்பது தெரியாமல் மணியை ஙே... ன்னு பார்த்தபடி , “நீ யாரை சொல்ற…” என்று கேட்கிறார். மணி பதில் சொல்லவில்லை. ஆனால் ரவீனாவால் மணி Disturb ஆகி உள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.
கூல் சுரேஷ் பூர்ணிமாவை எல்லோருக்கும் மத்தியில் கலாய்க்க, அதில் காண்டான பூர்ணிமா அமைதியாக அமர்ந்து இருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த கூல் சுரேஷிடம், “ ஏய் அண்ணா… நீ என்னை என்ன வேணாலும் கலாய்ச்சுக்கோ அதை பற்றி நான் கவலைபடமாட்டேன். ஆனால் அந்த மணி, ரவீனா முன்னாடி மட்டும் கலாய்க்காதே… என்னை கலாய்ச்சா அவங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு சிரிப்பு வருது. அதுதான் என்னால தாங்கிக்கமுடியல…” என்று கண்ணீர் வடிக்கவும்,
அவ்வளவுதானே உன் பிரச்னை, அவங்களை கலாய்ச்சா நீ சிரிப்பியா?... நீ சிரிக்குறேன்னு சொல்லு, நா என்ன செய்யுறேன்னு பாரு” என்று பாசமலர் சிவாஜி ரேஞ்சுக்கு கூல் மணி சொல்லிவிட்டு தூங்க சென்றுவிடுகிறார்.
இங்கு ஸ்மால் பாஸ் வீட்டில், பூர்ணிமா தனது தனது சகுனிதனத்தை தானே மெச்சிக்கொண்டு மாயாவிடம் சிரித்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த அக்ஷயாவிடம்” அக்ஷயா… நீ எங்க குடும்பத்திற்கு வந்துடுறீயா? இங்க நாங்க குழந்தைங்க, மாடு எல்லோரும் ஒன்னா ஒரே குடும்பமா இருக்கோம்” என்று அக்ஷயாவின் மண்டையை கழுவுகிறார் பூர்ணிமா.
இந்தப் பக்கம், பிக்பாஸ் வீட்டிலிருக்கும் நிக்ஸன் மணியிடம் தான் கண்ட கனவை பற்றி கூறுகிறார்.
“நேத்து நைட்டு ஒரு கனவு, ஒரு அடர்ந்த காடு அதுக்கு நடுவுல ஒரு வீடு, என் போன்ல சார்ஜ் தீர்ந்ததால, சார்ஜ் போடுவதற்காக நான் போனை அந்த வீட்டுல இருக்கும் ஒருத்தர்கிட்ட கொடுக்குறேன். அவங்க பேரு M ல ஆரம்பிக்கும், அவங்க என்ன ரொம்ப ஓவரா பேசினாங்க… எனக்கு ஆத்திரம் தாங்கல… அவங்க கழுத்த பிடிச்சு செவுத்துல நிக்கவச்சுட்டேன். “ என்று டெரர் கனவை கூலாக சொல்லவும் மணி கொஞ்சம் ஜெர்க் ஆகத் தான் செய்தார்.
“டேய் அந்த M நானில்லையே… மனசுல உனக்கு இத்தன வன்மமாடா?” என்கிறார்.
இப்படியாக ஒருவருக்குள் ஒருவர் தங்களது வன்மத்தை மறைமுகமாக கக்கத்தொடங்கி இருக்கின்றனர்.