நேற்று ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்திருந்தனர். இருவரும் பார்க்கிங் படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் ஒன்றாம் தேதி திரையில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
இதில் முதல் நாளே வந்த ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் வீட்டினருடன் தங்க நினைத்து, பிக்பாஸிடம் பர்மிஷன் கேட்டுக்கொண்டு ஸ்மால் பாஸ் வீட்டினருடன் இரவு தங்கியிருந்தார். மறுநாள் காலை இந்துஜா விருந்தினராக வந்தார். இதில் இந்துஜா அனைவரிடமும் சகஜமாக பேச பூர்ணிமாவை கண்டுகொள்ளவே இல்லை.
ஏற்கனவே தனக்கு வெளியில் எதிர்மறையான விமர்சனம் இருக்கு என்று தெரிந்துக்கொண்ட பூர்ணிமா ஒரு வார காலமாக மனவருத்தத்துடன், கண்ணீரும் கம்பளையுமாக நின்றுக் கொண்டிருக்கிறார். இதில் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்த இருவருமே பூர்ணிமாவை கண்டுக்கொள்ளாதது அவரின் மன உளைச்சலை மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து பூர்ணிமா மாயாவிடம் பேசுகையில், “நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கிறேன். வெளியில் இருந்து விருந்தினராக வருபவர்கள் எனக்கு ஆறுதலாக ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும். இந்த இந்துஜா எனது பள்ளி கால தோழி. நானும் அவளும் க்ளோஸ் ப்ரண்ட்ஸ். ஆனா இங்க வந்ததிலிருந்து அவ என் முகத்தை கூட பார்க்கல, என் கூட பேசக்கூட இல்ல... நான் தான் அவகிட்ட போய் பேசிட்டு இருந்தேன். அப்பவும் அவ என்ன கண்டுக்கல, நா எங்கே இருக்கேன்னு தேட கூட இல்ல... எல்லார்கிட்டையும் பேசின அளவு கூட என்கூட பேசல... நா என்ன தப்பு செய்தேன்? ” என்கிறார்.
பூர்ணிமா சொல்லிதான் நமக்கு இந்துஜாவும் பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகள் என்று தெரியும். ஏனெனில் பூர்ணிமா சொல்லியது போல இந்துஜா, பூர்ணிமாவை தனது தோழி என்று சொல்லவில்லை. ஒரு வேளை பிக்பாஸ் இவரிடம் வீட்டிற்குள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளை இட்டு இருக்கலாம்.
இது குறித்து கூல் சுரேஷ் பூர்ணிமாவிடம், ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று, “அவங்க இப்போ படத்துல நடிச்சு உயரத்தை எட்டிடாங்க... அதனால உன்னை கண்டுக்காம இருக்கலாம்.” என்று எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறார்.
இது பூர்ணிமாவை மேலும் குழப்பி இருக்கிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு இந்த வாரம் அதை எப்படி வெளிப்படுத்துவார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்..