நிக்சனை மாயாவும் பூர்ணிமாவும் சேர்ந்து கலாய்ப்பது நமக்கு அப்பட்டமாகவே தெரிகிறது. இதுநாள் வரை பூர்ணிமாவும் நிக்சனும் அக்காள், தம்பி என்ற உறவுமுறைக்கொண்டு பழகிவந்தார்கள். ஆனால் திடீரென்று நிக்சனை பூர்ணிமா தனது கடைக்கண்ணால் பார்த்து வருகிறார். நிக்சனை ப்ரின்ஸ் என்கிறார், வாடா போடா போய்.. வாங்க போங்க என்று அழைக்கிறார். அவரை வர்ணிக்கிறார்.. நிக்சனின் மடியில் தலை வைத்து படுத்துகொள்கிறார். நிக்சனும் ஆறுதலாக பூர்ணிமாவின் தலையை வருடிக்கொடுக்கிறார். மாயாவும் அவர் பங்கிற்கு நிக்சனுடன் உசரிக் கொண்டிருக்கிறார்.
இன்னும் சொல்லவேண்டுமென்றால் நிக்சனுக்கு வலதுபுறமாக மாயாவும், இடதுபுறம் பூர்ணிமாவும் என்று ஒரே பெட்டில் மூவரும் படுத்துக்கொள்கின்றனர். ஒருவேளை கண்டண்டுக்காக இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட அதைப்பார்க்க உவப்பாக இல்லை. ஏற்கனவே நிக்சனின் பெயர் மக்கள் மத்தியில் எதிர்மறையாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் இவர்கள் செய்யும் இச்செயலால் நிக்சனின் பெயர் மக்கள் மத்தியில் இன்னும் எதிர்மறையாக மாறுவது நிஜம்.
இதில் பூர்ணிமாவும் நிக்சனும் சேர்ந்து ஒரு பாட்டுக்கு நடனமாடியதை பற்றி மாயா பேசும் பொழுது, “நிக்சன் உனக்கு ரொமான்ஸ் எக்ஸ்பிரசன் கம்மியா இருந்தது“ என்கிறார். அதற்கு பதில் சொன்ன நிக்சன், “இவங்கள நான் அக்கா என்று கூப்பிட்டதால் எனக்கு ரொமான்ஸ் வரல... ஒருவேள நான் இவங்கள அக்கான்னு கூப்பிடாம இருந்திருந்தா அல்லது என் வயசு பொண்ணாக இருந்திருந்தா எனக்கு ரொமான்ஸ் வந்திருக்கும்” என்கிறார். “அப்போ நா உன் வயசு பெண் இல்லையா? விசித்திரா வயசுன்னு சொல்லாம சொல்றியா” என்று பூர்ணிமா கேட்கிறார்.
அடுத்ததாக ticket to finale டாஸ்கில் kill card, stay card கொடுக்கப்படும் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் மாயா விசித்திரா விளையாடும் போது, மாயா டைட்டில் வின்னர் ஆவது போல் கனவு கண்டதாக விசித்திரா கூறவும், அது கெட்ட கனவு தானே என்று மாயா கேட்கிறார். இதில் மாயா விசித்திராவுக்கு stay card தருகிறார். விசித்திரா மாயாவுக்கு kill card தருகிறார். அப்பொழுது மாயாவின் முகம் மாறியதை பார்க்கலாம் அதே போல் தினேஷூடன் மிகவும் க்ளோஸாக இருந்த விஷ்ணு தினேஷூக்கு kill card கொடுத்தார். ரவீனாவும், மணியும் விளையாடும் போது ரவீனா மணிக்கு kill card கொடுத்தார்.
இதைஎல்லாம் பார்க்கும்பொழுது, ஓட்டைக்கப்பலில் தான் உயிர் பிழைக்க அருகில் இருப்பவரை தூக்கி கடலில் வீசுவதைப்போல இருந்தது. இதில் கடலில் விழுந்தவர் காப்பாற்றப்படுவாரா அல்லது ஓட்டை கப்பலில் இருப்பவர் காப்பாற்றபடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதில் விசித்திரா 3 பாயிண்ட்கள் எடுத்து வெற்றிபெற்றார். அடுத்து நடந்த ஸ்பாட்லைட் டாஸ்கில் விஷ்ணு 3 பாயிண்டுகள் எடுத்து வெற்றி பெற்றார்.