பிக்பாஸ் 7: ”நீங்க செய்த ஓரங்க நாடகத்தை ஏற்க முடியவில்லை” விசித்திராவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்!

”1987ல் ரசிகர்களுக்காக ”மய்யம்” என்ற ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தோம். ஒரு இடைநிலை இலக்கிய பத்திரிக்கையாக இருக்கவேண்டும் என நினைத்தோம்” கமல்ஹாசன்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி
Published on

பிக்பாஸ் 91ம் நாள்

”செலுத்தவேண்டிய வரியை சரியாக செலுத்துங்கள் இல்லையென்றால் சாலை சரியில்லை, தண்ணீர் வரவில்லை என்று நம்மால் அரசாங்கத்தை கேள்வி எழுப்பமுடியாது” என்று கூறி, அகம் டீவி வழியாக அகத்திற்குள் சென்றார் கமல்ஹாசன்.

விஜய் டீவி

”புதுவருட தீர்மானமாக நீங்கள் மற்றவர்களுக்கு என்ன சொல்ல இருக்கிறீர்கள்?” என்ற கமலின் கேள்விக்கு, தினேஷ், விஷ்ணுவின் கதை திரைப்படமாக உருவாகவேண்டும் என்றும், நிக்சனின் பாடல் 50க்கும் மேல் வெளிவரவேண்டும் என்று கூறினார். இப்படி வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் மற்றவர்களை பற்றி கூறிவந்தனர்.

அடுத்ததாக பேசிய கமல், வைரமுத்துவின் கவிதைகள் குறித்தும், அதை படிக்க வேண்டியது குறித்தும் நம்மை ஊக்குவிக்கிறார். கலைஞர், சிவாஜிகணேசன், கண்ணதாசன் மூவரையும் தமிழின் மும்மூர்த்தி என்றும் இவர்கள் மூவரும்தான் எனக்கு இலவசமா தமிழை கற்றுக்கொடுத்தனர் என்றும் கூறினார்.

”ஆங்கிலத்தில் பேசினால் படித்தவர் என்று நாம் நினைத்துக்கொள்கிறோம் ஆனால் அது தவறு, ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். நமக்கும் தமிழ் என்ற ஒரு அற்புதமான மொழி உண்டு, பல மொழிகள் செத்துக்கொண்டு இருக்கிறது, பல்லாயிரமாண்டுகள் வாழுகின்ற தமிழ் மொழியை நாம்தான் எடுத்து வழிநடத்தவேண்டும்” என்று தமிழின் அருமையை நமக்கு கூறுகிறார்.

NGMPC22 - 147

பிறகு கோபத்தை பற்றி போட்டியாளருக்கு விளக்குகிறார். “எனக்கு கோபம் வரும் சமயம் எல்லோரும் என்கிட்ட சொல்றது, ’கோவம் வரும்பொழுது 10 வரை எண்ணு, கோவம் குறையும் ... ’ அப்படீப்பாங்க... நான் எண்ணக் கற்றுக்கொண்டதே கோபத்தினால்தான். கோபம் வரும்பொழுது எண்ண ஆரம்பித்தால், 1.. இரு வரேன், 2 .. இருடா வரேன்,3.. ஏய்.. வரேன் இரு... இப்படி 100 வரைக்கும் எண்ண,எண்ண... கோபம் அதிகமாகி ரொம்ப கோபபட்டு திட்டிடுவேன். ஆக கோபத்தை இப்படி எல்லாம் நிறுத்தமுடியாது. ” என்கிறார்.

அடுத்ததாக, ரவீனா சிரிப்பை பற்றி கூறும் பொழுது, “நீங்க சிரிக்கிறது நல்ல விஷயம். இந்த சிரிப்பு கடைசி வரைக்கும் நிலைக்கணும். உதாரணத்துக்கு, சிங்கீதம் சீனிவாசராவ். இவரு 90 வயதை தாண்டிட்டாரு. இவருக்கு 5 நிமிஷத்திற்கு மேல சிரிக்காம இருக்கமுடியாது. அதனால இவர இரங்கல் கூட்டத்திற்கு கூட்டிட்டு போகமாட்டேன். ஏன்னா அங்க வந்தும் எதுக்கு வந்தோம் என்பதையே மறந்து சிரிச்சுடுவாரு. நல்ல ஆரோக்கியத்திற்கு அடையாளம் சிரிப்புதான். அதனாலதான் அவரு நல்லா இருக்காரு. நீங்களும் சிரிப்பை விடாதீங்க“ என்றார்.

 சிங்கீதம் சீனிவாசராவ்
சிங்கீதம் சீனிவாசராவ்

பிறகு விசித்திரா தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசியதை கண்டித்தார் கமல். “விசித்திரா, நீங்க செய்த ஓரங்க நாடகத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாத்திரம் துலக்கிக்கொண்டே நீங்க உங்களுக்குள்ளே பேசிகிட்டதை என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை “ என்கிறார்.

ஆனால், “நானா” என்ற விசித்திராவின் bodylanguage கமலை மட்டுமல்ல நம்மையும் எரிச்சலடைய செய்தது. ”நீங்கதான்...” என்ற கமலின் பதிலுக்கு, மக்கள் கைதட்டவும், நிலமையை புரிந்துக் கொண்ட விசித்திரா டக்கென்று அமைதியாக பதிலளித்தார்.

” சார் நான் புலம்பினேன்” என்றார். ஆனால் கமல் விடுவதாக இல்லை. ”இது புலம்பல் இல்லை ஓரங்கநாடகம், ஆனால் இன்னொருத்தர் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் இறங்கி பேசுவது என்பது தவறு. நீங்கள் பேசுவது உங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே கேட்கும் என்று தெரிந்து பேசுவது தவறு...” என்றார்.

NGMPC22 - 147

ஆனால் தான் பேசியது என்ன என்றே தெரியாதமாதிரி “நான் என்ன சார் பேசினேன்?” என்று நடித்த விசித்திராவை, கமல், மிகவும் பாலிஷாக ”அதை நான் மறுபடி பேசி இன்னொருத்தரை புண்படுத்தவிரும்பவில்லை” என்றார் நாசுக்காக. இதற்காகவே நாம் கமலுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். ஆக விசித்திராவின் இத்தகைய போக்கு இந்தவாரம் அவர் வெளியே செல்வது உறுதி என்பதை காட்டுவதுபோல் இருந்தது.

அடுத்ததாக நிக்சனும், ரவீனாவும் எவிக்டட் ஆனார்கள்.

புத்தக பரிந்துரை

”1987ல் ரசிகர்களுக்காக ”மய்யம்” என்ற ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தோம். ஒரு இடைநிலை இலக்கியபத்திரிக்கையாக இருக்கவேண்டும் என நினைத்தோம்” என்றவர் இந்த வார புத்தக பரிந்துரையாக தான் எழுதிய மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள் என்ற புத்தகத்தை பரிந்துரைத்தார். ”இது கமல் பண்பாட்டு மய்யம் சார்பாக வெளியிடப்பட்டது. வர இருக்கின்ற சென்னை புத்தககண்காட்சியில் இது கிடைக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com