"சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்போ ரெண்டு வீடு”- ட்விஸ்ட் வைக்கும் கமல்..வெளியான பிக்பாஸ்7 அறிவிப்பு

சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்போது ரெண்டு வீடு.. இந்த சீசனிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம்.
bigboss 7
bigboss 7pt web
Published on

உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவிற்கு வந்து பல வருடங்களை கடந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் பிரபலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்.

தமிழ்நாட்டில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 7 ஆவது சீசனை எட்டியுள்ளது. பிக்பாஸ் சீசன் வெற்றி பெற்றதால் பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தங்க வைக்கப்படுவார்கள். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பல கட்டங்களாக போட்டியாளர்கள் அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு மெகா பரிசுகள் வழங்கப்படும்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடற்கரையில் நின்றுகொண்டிருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரது கார் அருகில் இருக்கிறது. காரில் பிக்பாஸ் கொடுக்கும் அழைப்பு தெரிகிறது.

அவர் காரில் ஏறி கெளம்பலாமா எனும் போது மற்றொரு கதவின் வழியாக அடுத்த கமல்ஹாசன் ஏறி தாரளமாக என்கிறார். இரண்டாவதாக ஏறிய கமல்ஹாசனின் தமிழ் உச்சரிப்பு வித்தியாசம் இருக்கிறது (லோக்கல் பாஸை என்று சொல்வதுபோல்).

வீட்டில் இருப்பது போன்ற காட்சியில் தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டுள்ளார்கள். 100 நாட்கள், 60 கேமிராக்கள், 20 பங்கேற்பாளர்கள் ஒரு வீடு தானே என்று ஒரு கமல் சொல்ல.. எல்லாம் ஓகே தான் வீடு மட்டும் இரண்டு என்று கூறுகிறார். அதன்பிறகு ’சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்போது ரெண்டு வீடு.. இந்த சீசனிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம்’ என்று கமல் கூறுவதுடன் அந்த ப்ரமோ முடிகிறது. போட்டியில் பங்கேற்பவர்களை எப்படி இரண்டு வீடுகளிலும் பிரிக்கப் போகிறார்கள் என்பது குறித்து இப்போதே யூகங்கள் வெளிவந்துகொண்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com