நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் நடிகரும், எம்.எல். ஏவுமான முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகையின் குற்றச்சாட்டை தொடர்ந்து, கேரள காவல்துறை ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தன்னை கைது செய்வதற்கு தடை கோரி எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் முகேஷ் மனு அளித்திருந்த நிலையில், 5 நாட்கள் அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கோரி முகேஷூக்கு எதிராக கேரள காங்கிரஸினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி விலகியதை குறிப்பிட்டு பிரபல நடிகை பார்வதி விமர்சித்துள்ளார்.
ஊடகங்களில் இதுகுறித்து பேசவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், கோழைத்தனமாக தங்கள் பதவியில் இருந்து விலகுவதா என கேள்வி எழுப்பி உள்ளார்.