இந்திய சினிமா உனை மறவாது தமிழா

இந்திய சினிமா உனை மறவாது தமிழா
இந்திய சினிமா உனை மறவாது தமிழா
Published on

சினிமா ஒரு காட்சி ஊடகம் என தமிழ்த் திரையுலகிற்குக் காட்டிய பாலுமகேந்திராவின் நினைவு தினம் இன்று. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் திரைமொழி பேசியவர் அவர்.

வீடு, சந்தியாராகம், வண்ண வண்ணப் பூக்கள், அழியாத கோலங்கள் எனும் அவரது படைப்புகள் அவருக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தன. கன்னடத்தில் ‘கோகிலா’வும் தமிழில் ‘மூன்றாம் பிறையும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றது.

பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி போன்ற இன்றைய இயக்குனர்களை உருவாக்கிய படைப்பாளி அவர். மூன்றாம் பிறையில் அவரது இயக்கத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கமலஹாசன் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘Remembering Balumahendra. Apart from friends Indian cinema misses you என்றும் இந்திய சினிமா உனை மறவாது தமிழா...’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com