தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஆறாயிரம் பெண்கள் நடிகர் பிரபாஸிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் பிரபாஸ், ’பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு, இந்தியாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகிவிட்டார். தற்போது அமெரிக்காவுக்கு டூர் சென்றுள்ள பிரபாஸுக்கு வயது 37. தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களான அனுஷ்கா, தமன்னா உட்பட பல்வேறு ஹீரோயின்களுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ள பிரபாஸுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வருகிறார்களாம். இதற்கிடையே, பாகுபலி படத்துக்காக, மொத்தம் 5 வருடம் செலவழித்திருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, சுமார் ஆறாயிரம் பெண்கள், ’என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’ என்று விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் பிரபாஸிடம்.
மச்சக்கார பிரபாஸ், ‘ஸாரி, அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை’ என்று ஒதுங்கிவிட்டாராம்.