பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகியும் பாகுபலி 2 படம் தொடர்ந்து பாலிவுட் பாக்ஸ் ஆஃபீஸில் 100 நாட்கள் இருந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
100 நாட்கள் ஓடிய படம், ஒரு வருடம் திரையரங்குகளில் ஓடிய படம் என்று நாம் தற்போது எந்த படத்தையும் கூற முடியாது. அதெல்லாம் அந்தக்காலம் என்று கூறப்படும் காலகட்டத்தில், பாகுபலி 2 படம் தொடர்ந்து 100 நாட்களாக பாலிவுட்டின் பாக்ஸ் ஆஃபீஸில் இருந்து வருகிறது.
இது ஒரு அசாதாரண சாதனை. ஏனென்றால், பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்களான சல்மான் கானின் ‘டியூப்லைட்’, ஷாருக் கானின் ‘ஜாப் ஹேரி மெட் செஜால்’, அனில் கபூரின் ‘முபாராகான்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு மத்தியில் பாகுபலி 2 பாக்ஸ் ஆஃபீஸில் ராஜநடை போட்டு வருகிறது.
பொதுவாக ஒரு படம் ஒரு வாரம் மட்டும் பாக்ஸ் ஆஃபீஸில் இருந்தாலே, படத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகையை எடுத்து விடலாம். ஆனால் பாகுபலி 2 உலக அளவில் சுமார் 2000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 625 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.