விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக பரவும் செய்தியில் உண்மையில்லை : பெங்களூரு போலீசார் விளக்கம்

விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக பரவும் செய்தியில் உண்மையில்லை : பெங்களூரு போலீசார் விளக்கம்
விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக பரவும் செய்தியில் உண்மையில்லை : பெங்களூரு போலீசார் விளக்கம்
Published on

நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக பரவும் செய்தியில் உண்மையில்லை என: பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு விமான நிலையத்தில் அடையாளம் தெரியதாக நபரால் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் கூறியுள்ள போலீசார் இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றிருந்த நடிகர் விஜய் சேதிபதியை விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விமான நிலையத்தில் உதவியாளர்கள் மற்றும் காவலர்களுடன் விஜய் சேதுபது நடந்து சென்று கொண்டிருக்க திடீரென அங்கு வரும் ஒருவர் ஏறி காலால் உதைப்பது போல் அந்த வீடியோ உள்ளது. ஆனால், விஜய்சேதுபதி மீது அடி விழுந்ததா என தெரியவில்லை. ஆனால், அப்போது விஜய்சேதுபதி நிலைகுலைந்து போனார். 

காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜய்சேதுபதியின் உதவியாளர் தான் தாக்கப்பட்டுள்ளார் என தற்போது  தெரியவந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com