இந்தியா மட்டுமல்லாமல்... உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பேசப்பட்ட திருமணம் என்றால், அது அம்பானி வீட்டு திருமணம்தான். இதற்காக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சியில், பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், ஹாலிவுட் மாடல் கிம் கார்தர்ஷியன், ஜான் சீனா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேலும் ஷாருக் கான், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், சல்மான் கான் உள்ளிட்ட பல்வேறு இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் திருமணக் கொண்டாட்டத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
அப்போது திருமணத்தின் இரண்டாவது நாளில், அட்லீ இயக்கி, அமிதாப் பச்சன் பின்னணி குரல் கொடுத்த 10 நிமிட அனிமேஷன் படம் விருந்தினர்களுக்காக தனித்து ஒளிப்பரப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலை பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.