ஸ்பிளீட் ஸ்கிரீன் முறையில் தமிழில் முதன்முறையாக உருவாகும், ‘பிகினிங்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘நான் மகான் அல்ல’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் வினோத் கிஷன். இதேபோல் ‘96’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கவுரி கிஷன். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ‘பிகினிங்’. இந்தப் படம் பிளவு திரை, அதாவது ஸ்பிளீட் ஸ்கிரீன் (split screen) திரைப்படமாக உருவாகி வருகிறது.
திரையில் ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் ஒளிப்பரப்பாவதே ஸ்பிலிட் ஸ்கிரீன் திரைப்படமாகும். இந்த முறையில், ஆசியாவிலேயே முதல் திரைப்படமாக உருவாகி வரும் ‘பிகினிங்’ படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்குகிறார். வீரா ஒளிப்பதிவு செய்ய, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.