அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ”ரெண்டகம்” படத்தை ஓடிடி’யில் வெளியிட தடை-நீதிமன்றம் உத்தரவு

அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ”ரெண்டகம்” படத்தை ஓடிடி’யில் வெளியிட தடை-நீதிமன்றம் உத்தரவு
அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ”ரெண்டகம்” படத்தை ஓடிடி’யில் வெளியிட தடை-நீதிமன்றம் உத்தரவு
Published on

அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான 'ரெண்டகம்' படத்தை இந்தியாவில் ஓடிடி தளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஃபெலினி இயக்கத்தில் தமிழில் ”ரெண்டகம்” என்ற பெயரிலும், மலையாளத்தில் ”ஒட்டு” என்ற பெயரிலும் இயக்கக்கப்பட்ட திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரெண்டகம் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாக இருந்த நிலையில் அதற்கு தடைக்கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்த படத்தின் கதையை ஜாவா என்ற பெயரில் இயக்குவதற்காக நடிகர் அரவிந்த் சாமியிடம் கதை சொல்லியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கதையை பதிவு செய்து அதற்கான காப்புரிமை பெற்ற நிலையில், இதே கதைகளத்துடன் தமிழில் ரெண்டகன் என்ற படம் வெளியாகியுள்ளது. அதனால் இன்று ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், ரெண்டகம் படத்தை ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா பத்து லட்சம் ரூபாயை அக்டோபர் 10ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com