சர்வதேச விருதுகள் வாரிக் குவிக்கும் 'அறமுடைத்த கொம்பு' திரைப்படம்!

சர்வதேச விருதுகள் வாரிக் குவிக்கும் 'அறமுடைத்த கொம்பு' திரைப்படம்!
சர்வதேச விருதுகள் வாரிக் குவிக்கும் 'அறமுடைத்த கொம்பு' திரைப்படம்!
Published on

சர்வதேச அரங்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இரண்டாவது முறையாக பெற்றுள்ளது நெல்லையை சேர்ந்த இளம் இயக்குனரின் முதல் படைப்பான "அறமுடைத்த கொம்பு" திரைப்படம்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் ஜாக்சன்ராஜ். இவர் பரியேறும் பெருமாள் இயக்கிய மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிறந்த மாவட்டமான நெல்லைக்கு பெருமை சேர்க்கும் வகையில் "நெல்லை ஆந்தம்" என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரைத்துறையில் தனது சாதனை படைப்புகளை உருவாக்க தொடங்கியிருந்த இயக்குனர் மாரி செல்வராஜ் தனது பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிவதற்கு ஜாக்சன்ராஜிக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார். உதவி இயக்குனராக பணியை தொடங்கிய ஜாக்சன் ராஜ் அவ்வப்போது சிறிய கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து கொண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

குறும்படங்கள் டான்ஸ் நிகழ்ச்சிகள் என இயக்கிக் கொண்டிருந்தவர் 2015ல் உருவாக்கிய நெல்லை ஆந்தம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.   இந்த வெற்றிகள் தந்த நம்பிக்கை திரைப்பட இயக்கத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் திரைப்பட கனவை இயக்கத் தொடங்கினார். "அறமுடைத்த கொம்பு" என்ற பெயரில் தனது சொந்த மாவட்டமான நெல்லையை சேர்ந்த மக்கள் மற்றும் திரைக்கலைஞர்களைக் கொண்டு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த மாதம் சிங்கப்பூரில் நடந்த World film carnival விழாவில் Narrative feature பிரிவில் "அறமுடைத்த கொம்பு" திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்த மாதம் 08.08.22 ம் தேதியில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் "அறமுடைத்த கொம்பு" திரைப்படத்திற்கு அவுட் ஸ்டேன்டிங் அச்சீவ்மென்ட் அவார்டு பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த இளம் இயக்குனரின் முதல் திரைப்படத்திற்கு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு தொடர்ந்து விருதுகளை பெற்று வருவது மண் சார்ந்த தமிழ் படைப்புக்கு கிடைக்கும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெல்லையைச் சேர்ந்த சென்னையில் வாழும் திரைத்துறை கலைஞர்கள் இளம் இயக்குனரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதே நிகழ்ச்சியில் தான் சிறந்த நடிகருக்கான பிரிவில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-நெல்லை நாகராஜன்

இதையும் படிக்க: காமன்வெல்த் நிறைவு விழாவில் தூள் கிளப்பிய யுவனின் பாடல்! வைரலாகும் வீடியோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com