ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி விவகாரம்... விசாரணைக்கு ஒருவர் ஆஜர்!

சோழிங்கநல்லூரில் இருக்கும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏசிடிசி நிறுவனத்தின் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் விசாரணைக்கு ஆஜரானார்

சென்னை பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடந்த இடத்தில் ஏற்பட்ட ஏற்பாட்டு குளறுபடியால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் நிகழ்ச்சிக்கு உள்ளே செல்ல முடியாமல் தவித்துப் போனதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். அடுத்தடுத்து பல்வேறு குளறுபடிகள் குறித்து தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இசை நிகழ்ச்சி குறித்தும், அதற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்ற பனையூரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் விசாரணை நடத்தினார். இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த குழுவினரிடமும் அமல்ராஜ் விசாரணை நடத்தினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆஜர் 

ARRahman | ARRConcert
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆஜர் ARRahman | ARRConcert

இந்நிலையில் சோழிங்கநல்லூரில் இருக்கும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏசிடிசி நிறுவனத்தின் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் விசாரணைக்கு ஆஜரானார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com