சாய்ரா பானுவை தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் போட்ட பதிவு! முடிவுக்கு வரும் 29 ஆண்டுகால திருமண பந்தம்?

”நாங்கள் எங்களது திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பினோம், ஆனால்” - ஏ.ஆர் ரகுமான்
A r Rahman
A r Rahmanமுகநூல்
Published on

ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்திருந்தநிலையில், இதுதொடர்பாக ஏ.ஆர்.ரகுமானும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான்.. சாதனை நாயகனாக வலம்வந்தாலும், அதற்கெல்லாம் சிறுதும் கூட கர்வம் கொள்ளாமல், சொல்லும் ஒரே வார்த்தை ‘எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்பதுமட்டும்தான். ஆஸ்கர் விருது வென்ற இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார்.

இசைவாழ்க்கை மட்டுமல்ல, இவரின் திருமண வாழ்வும் ஒரு அழகான காதலை உள்ளடக்கியதுதான்.. 1995 , மார்ச் 12 ஆம் தேதி ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு இருவருக்கும் திருமணம் நடக்கிறது.. கதிஷா, ரஹிமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் பிறக்கிறார்கள்.

இப்படி அழகாக செல்லும் இவர்களது திருமணப்பந்தம் 29 ஆண்டை வந்தடைகிறது. இந்நிலையில்தான், தற்போது இருவரும் தங்களது 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில்,

"நாங்கள் எங்களது திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவை நோக்கி நகர்ந்துவிட்டது.

கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இந்த சிதைவுகள் மீண்டும் எங்களின், இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அதற்கான அர்த்தத்தை நாங்கள் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்த எங்களின் நண்பர்களுக்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

A r Rahman
"ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தபோதிலும், இந்த முடிவு..” - ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

முன்னதாக, இருவருக்குமிடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், மிகுந்த வலி மற்றும் வேதனையில்தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளேன் என்றும் ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தநிலையில், தற்போது ஏ.ஆர். ரகுமானும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com