“எனது திருமணம் இவ்வளவு பெரிய விஷயமா?” - அனுஷ்கா கேள்வி

“எனது திருமணம் இவ்வளவு பெரிய விஷயமா?” - அனுஷ்கா கேள்வி
“எனது திருமணம் இவ்வளவு பெரிய விஷயமா?” - அனுஷ்கா கேள்வி
Published on

நடிகை அனுஷ்கா தனது திருமணம் குறித்து வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அனுஷ்காவுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உண்டு. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடிப்பில் வெளியா சிங்கம் பெரிய வெற்றியை அடைந்தது. அதன்பின் வெளியான சிங்கம் 2, சிங்கம் 3 என அனைத்திலும் நடித்திருந்தார். அவரது திருமணம் தொடர்பாக சில ஆண்டுகளாகவே நிறைய வதந்திகள் வந்தபடியே உள்ளன. ஆனால் அவர் அது குறித்து விளக்கம் அளித்து கொண்டேதான் இருக்கிறார். அந்தளவுக்கு அனுஷ்கா கல்யாணம் குறித்து அறிவதில் அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் சில காலமாக அவரது திருமணம் பற்றி அதிம் பேச்சு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. அவர் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து அனுஷ்கா மனம் திறந்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசுகையில், இது ஒரு வதந்தி என்றும் அதில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வகையான செய்திகளை கொஞ்சம் கூர்ந்து அறிவுடன் கையாளுமாறு அவர் மக்களைக் கேட்டு கொண்டுள்ளார். தனது திருமணமானது ஏன் அனைவருக்கும் இவ்வளவு பெரிய விஷயமாக இருக்கிறது என்றும் அனுஷ்கா கேட்டுள்ளார். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு என்று ஒரு இடைவெளியை கடைப்பிடிக்க விரும்புகிறேன் என்றும், அதில் யாரும் நுழைவதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

திருமணம் என்பது ஒரு புனிதமான இடம். அது தனக்கு முக்கியம். அது நடக்கும்போது அனைவருக்கும் நிச்சயம் தெரிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

அனுஷ்கா சமீபத்தில் சுரேந்தர் ரெட்டி இயக்கிய சாய் ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார் மாதவனுடன் அவர் நடித்துள்ள நிஷாபதம் விரைவில் வெளிவர உள்ளது. இதனை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com