அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு வாபஸ்

அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு வாபஸ்
அன்புச்செழியனின் முன்ஜாமீன் மனு வாபஸ்
Published on

பைனான்சியர் அன்புச்செழியன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியன் சார்பில் முன்ஜாமீன் கோரி நவம்பர் 28 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அன்புச்செழியன் சார்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் தற்போது அன்புச்செழியன் மீது போலீசார் கந்துவட்டி வழக்குப்பதிவு செய்துள்ளதால், அவரது முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அன்புச்செழியன் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்துகொண்டார். பைனான்சியர் அன்புச்செழியன் துன்புறுத்தலால்தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக்அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com