கொஞ்சம் பெரிய வீடா கிடைக்குமா? தேடுதல் வேட்டையில் எமி!

கொஞ்சம் பெரிய வீடா கிடைக்குமா? தேடுதல் வேட்டையில் எமி!
கொஞ்சம் பெரிய வீடா கிடைக்குமா? தேடுதல் வேட்டையில் எமி!
Published on

மும்பையில் பிரமாண்ட பங்களா டைப் வீடு ஒன்றை வாங்க இருப்பதாக நடிகை எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவரும் நடிகை எமி ஜாக்சன், சமீபத்தில் சென்னையில் வீடு ஒன்று வாங்கினார். இதே போல மும்பை பாந்த்ரா பகுதியில் அவருக்கு சொந்த வீடு இருக்கிறது. அந்த வீடு அவருக்கு வசதியாக இல்லையாம். கொஞ்சம் பிரமாண்டமாக பங்களா டைப் வீடு வேண்டும் என்பதால் இப்போது தீவிரமாகத் தேடி வருகிறார்.

‘இப்போது ஆங்கில படம் ஒன்றில் நடித்துவருகிறேன். படப்பிடிப்புக்காக அடிக்கடி மும்பை வருகிறேன். என்னுடன் என் அம்மாவும் வருகிறார். என் செல்ல நாய்களுக்கும் விசாலமான இடம் தேவைப்படுகிறது. இதனால் மும்பையில் கொஞ்சம் பெரிய வீடு பார்க்கிறேன். வீடுகளில் முதலீடு செய்வதும் நல்லதுதானே’ என்றார் எமி ஜாக்சன்.

இவர் லண்டனில், ரெஸ்டாரெண்ட் ஒன்றை தொடங்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

அங்க இட்லி, சாம்பார் கிடைக்குமா தாயி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com