அமரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
வீரமரணமடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான், ‘அமரன்’ . இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலரிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில், தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து, நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருப்பினும், திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தின் உண்மையான சமூகம் மறைக்கப்பட்டதாக பலர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அமரன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் இது தொடர்பான சர்ச்சைக்களுக்கு படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர், “முகுந்தன் ஒரு தமிழர் என்ற அடையாளம் மட்டுமே இந்த படத்துக்கு இருக்க வேண்டும் என்பதுதான், அவரின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் எங்களிடம் வைத்த கோரிக்கை. அதே போல முகுந்த் ‘நைனா’ ‘நைனா’ என்று அழைக்கும் அவரின் தந்தை வரதராஜனும், ‘ஸ்வீட்டி’ என்று அழைக்கும் தாய் கீதாவும் எங்களிடம் வைத்த கோரிக்கை என்னவெனில்,
என்பதுதான். அந்த குடும்பத்தார் அனைவரும் எங்கள் முதல் சந்திப்பிலேயே இதை எங்களிடம் கேட்டுக் கொண்டனர்.
அதே நேரம் ஒரு இயக்குநராக, இந்த பயணத்தில் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு முக்கியமான விஷயமாக எங்கள் பார்வைக்குப் படவில்லை. அவர்கள் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது கூட நாங்களும் அதை கேட்கவில்லை. அவர்களும் அதை சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.