பெண்ணியம் என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்.
‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் ‘ஆடை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தணிக்கை குழு இதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய நிலையில், பல்வேறு சர்ச்சைகளை தாண்டி ‘ஆடை’ படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பெண்ணியம் என்ற வார்த்தை முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என நடிகை அமலாபால் குறிப்பிட்டுள்ளார். இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவது தனி மனித உரிமை, அவற்றை பெண்ணியம் என்று கூற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு பிரச்னையை பெண்ணியம் என்ற கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதத்துவத்துடன் அணுக வேண்டும் என்று அமலாபால் கூறினார். அதேபோல் ஆபாசம் என்பது ஆடையில் இல்லை, ஒருவருடைய பார்வையில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு பெண்ணியவாதி என்பதை விட சிறந்த மனிதர் என்பதையே விரும்புவதாகவும் அமலாபால் கூறியுள்ளார்.