‘50நிமிடத்தில் 10மடங்கு லாபம்?’ அமலா ஷாஜி வெளியிட்ட Promotion வீடியோவும், IT ஊழியரின் மோசடி புகாரும்

அமலா ஷாஜி வெளியிட்ட Promotion வீடியோவை நம்பி முதலீடு செய்து பணத்தை ஏமாந்த ஐடி ஊழியர்.. பூதாகரமாகும் இன்ஸ்டாகிராம் ஸ்கேம். நடந்தது என்ன? முழுமையாக பார்க்கலாம்.
amala shaji
amala shajipt
Published on

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்களாக மாறினால், பிரபலமாகிவிடலாம் என்ற காலம் போய், இன்ஸ்டாவில் விதவிதமான ரீல்ஸ்களை பதிவிட்டாலே பிரபலமாகிவிடலாம் என்ற போக்கு வந்துள்ளது. அப்படித்தான் பிரபலமானவர்களில் ஒருவர்தான் அமலா ஷாஜி. 100, 1,000 ரசிகர்கள் கிடையாது, 40 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.

இவ்வாறாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலமாக பிரபலமான அமலா ஷாஜி, தாங்கள் சம்பாதிப்பதற்காக பல நிறுவனங்கள் தொடர்பாகவும், பல தொழில் முனைவோர் தொடர்பாகவும் பணம் பெற்று அவர்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். அப்படியாக, அமலா ஷாஜியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வந்த ஐடி ஊழியர், அவரது Promotion வீடியோவைப் பார்த்து இன்ஸ்டா டிரேடிங் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். எப்படி நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.

amala shaji
“உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.க அரசு என்றும் திகழும்” - அமைச்சர் உதயநிதி

இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் அமலா ஷாஜி, ‘அனன்யா ஃபோரக்ஸ்’ என்னும் நண்பர் மூலம் முதலீடு செய்து நல்ல லாபம் பார்த்ததாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். மேலும், தன்னைப் பின்பற்றுபவர்கள் விருப்பப்பட்டால் அனன்யா ஃபோரக்ஸ் சமூக வலைதள கணக்கில் குறுஞ்செய்தி அனுப்பி டிரேடிங் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனைப் பார்த்த அவரது ரசிகர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் அனன்யா ஃபோரக்ஸ் என்ற Profile-க்கு மெசேஜ் செய்துள்ளார்.

அமலா ஷாஜியின் ஸ்டோரி மூலமாக டிரேடிங் செய்வது குறித்து அறிந்து கொண்டதாக அறிமுகமான அவரிடம், 1,000 ரூபாய் பணத்தை முதலீடு செய்தால் 50 நிமிடத்தில் 10,000 ரூபாயாக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர், அந்தப் பெண் அனுப்பிய QR CODEஐ பயன்படுத்தி 1,000 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். கிரிப்டோ வேர்ல்ட் என்ற ஆப் மூலமாக டிரேடிங் செய்து உங்கள் வங்கிக் கணக்கில் 12,000 ரூபாய் வரை லாபம் வந்துள்ளதாக ஸ்க்ரீன் ஷாட்டையும் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, இதுபோன்று சம்பாதிக்க வேண்டும் என்றால் முதலீடாக 8,999 ரூபாய் பணத்தை செலுத்தினால், மொத்தமாக 22,000 ரூபாயை திருப்பி தருவதாக டிரேடிங் செய்யும் பெண் ஆசை காட்டியுள்ளார்.

amala shaji
திருவள்ளூர்: சிப்காட் பூங்கா அமைக்க விளை நிலங்களை கொடுக்க முடியாது - விவசாயிகள் எதிர்ப்பு

இதனால் ஷாக்கான அந்த ஐடி ஊழியர், பணத்தை திரும்ப கொடுத்தால் போதும் என்று மெசேஜ் செய்துள்ளார். இதற்கு பதிலாக, “நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே டிரேடிங்கில் உங்களுக்கு லாபம் ஒரு லட்ச ரூபாய் வந்துள்ளது” என்று புதிய ஸ்க்ரீன் ஷாட்டை அனுப்பியுள்ளனர். டெபாசிட் பணமாக 18,999 ரூபாய் அனுப்பினால், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை தருவதாக டிரேடிங் செய்பவர் கூறிய நிலையில், தன்னால் 15,000 ரூபாயை மட்டுமே தரமுடியும் என்று கூறியுள்ளார் ஐடி ஊழியர்.

அதனையும் கொடுத்துவிட்ட நிலையில், ஜிபே எண்ணை வாங்கி பணத்தை செலுத்தியது போன்று முயற்சி செய்ததாக நம்ப வைத்த அவர், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும் பொழுது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளதாகவும், ரூ.31,000 வரி செலுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து பணம் பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் உங்கள் ட்ரேடிங் வருமானமே தேவையில்லை. எனது பணத்தை மட்டும் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

amala shaji
ராஷ்மிகாவை கரம்பிடுக்கிறாரா விஜய தேவர்கொண்டா? அடுத்த மாதம் நிச்சயதார்த்தம்?

இதற்கு பதிலளித்த ட்ரேடிங் செய்த நபர், பணத்தை அனுப்பிவிட்டோம். இன்னும் 15 முதல் 30 நாட்களில் உங்களுக்கு வந்து சேரும் என்று கூறியுள்ளனர். இதனையும் நம்பிய அவர், காத்திருந்த பார்த்தும் பணம் வரவில்லை. அந்த அக்கவுண்ட்டையும் காணவில்லை. அப்போதுதான் தான் மோசடியில் சிக்கி ஏமாந்தது அவருக்கு புரிந்தது.

குறிப்பாக இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி தனது தோழியென விளம்பரம் செய்து வீடியோ பதிவிட்டதால்தான், நம்பி பணத்தை ஏமாந்ததாக கூறிய ஐடி ஊழியர், இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜியிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். அவரை தொடர்புகொள்ள முடியாமல் போனதால், மோசடிக்கு ஆளாக காரணமான அமலா ஷாஜி, மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் டிரேடிங் செய்வதாக மோசடி செய்யும் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தபோது, நூதன முறையில் இன்ஸ்டாகிராம் டிரேடிங் மோசடி அரங்கேறியுள்ளதும். யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்கள் மூலமாக பணம் கொடுத்து விளம்பரம் செய்து மோசடி கும்பல் ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

Forex என்ற டிரேடிங் நிறுவன பெயரை பயன்படுத்தி ananya_forex, maya_forex என்ற பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகள் உருவாக்கி, ஆயிரக்கணக்கான பாலோவர்கள் இருப்பது போன்று காட்டி பலரையும் நம்ப வைத்து ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக இது போன்ற மோசடி கும்பல் சமூக வலைதள பக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, டிரேடிங் நிபுணர்கள் போன்று பேசி பலரிடமும் பணத்தை ஏமாற்றியுள்ளனர். அதில் உள்ள புகைப்படங்களை ஆய்வு செய்த போது வெளிநாட்டு மாடல்களின் புகைப்படத்தை எடுத்து, அதன் மூலம் சமூக வலைதள கணக்கை உருவாக்கி டிரேடிங் செய்வதாக கூறி மோசடியை அரங்கேற்றுவது தெரியவந்துள்ளது.

amala shaji
MasterChef India - Tamil: டிவி டூ ஓடிடி... இந்த முறை என்ன ஸ்பெஷல்..?

இந்த விவகாரத்தில் promotion வீடியோவைப் பதிவிட்ட அமலா ஷாஜி மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், அமலா ஷாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நான் ஒரு பொருளாதார நிபுணர் இல்லை. பொதுமக்கள் தான் செய்யும் விளம்பரங்கள் குறித்து ஆய்வு செய்து முதலீடு செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெளிவாக பதிவு செய்திருப்பதாகவும் அமலா ஷாஜி தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுபோன்று விளம்பரத்திற்காகவும், பணம் கிடைப்பதற்காகவும் உண்மைத்தன்மை தெரியாமல் சில மோசடி நபர்களுக்கு influencerகள் வீடியோக்கள் வெளியிடுவதால் பலர் ஏமாறுகின்றனர். இதனால், பணத்தை முதலீடு செய்பவர்களும், promotion வீடியோ வெளியிடுபவர்களும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.

amala shaji
ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com