"அப்பா... எங்களுக்கு வழிகாட்டுங்கள்" அமலாபாலின் உருக்கமான பிறந்த நாள் வாழ்த்து

"அப்பா... எங்களுக்கு வழிகாட்டுங்கள்" அமலாபாலின் உருக்கமான பிறந்த நாள் வாழ்த்து
"அப்பா... எங்களுக்கு வழிகாட்டுங்கள்"  அமலாபாலின் உருக்கமான பிறந்த நாள் வாழ்த்து
Published on

நடிகை அமலா பால் அவ்வப்போது ஊரடங்கு காலத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை சுறுசுறுப்பாக வெளியிட்டு வந்தார். குடும்பத்தினருடன் நேரத்தை உற்சாகமாகச் செலவிட்ட அவர், பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். ஆடை படத்தில் துணிச்சலாக நடித்த திறமையான நடிகையான அமலா பால், மறைந்த தன் தந்தைக்கு சமூகவலைதளத்தில் உணர்ச்சிகரமான பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். 

இரண்டு வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்துள்ள அவர், "இப்போது நீங்கள் எங்கே இருந்தாலும் நானும் அம்மாவும் ஜித்துவும் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆசியும் கிடைக்க வாழ்த்துகளைக் கூறுகிறோம். அடுத்த வாழ்த்து எனக்கானது. எங்கள் வாழ்க்கைப் பாதையை நாங்கள் கடக்கும்போது, உங்களை அடையாளம் காண்பதற்கு வழிகாட்டுங்கள். உங்களிடம் சிலவற்றைச் சொல்லவேண்டும்" என்று சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிவிட்டுள்ள அமலா பால், "நீங்கள் இல்லாமல் குடும்பம் முழுமை அடையாது. உங்களை இழந்து தவிக்கிறோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா" என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் 'அதோ அந்தப் பறவை போல...' போன்ற படங்களில் அமலா பால் நடித்துவருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com