சஞ்சய் காந்தியின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்படுகிறது. அவர் கேரக்டரில் அக்ஷய் கண்ணா நடிப்பார் என்று தெரிகிறது.
பிரபலங்களின் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுப்பது இப்போதைய டிரென்ட். சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசி யல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. மேரிகோம், தோனி, சச்சின் டெண்டுல்கர் பற்றிய படங்கள் வெளியான நிலையில், விளையாட்டு பிரபலங்கள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோரின் கதைகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் தலைவர்களின் கதைகளில் மன்மோகன் சிங் பற்றிய படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையானது. பிரதமர் மோடி பற்றிய பற்றிய படம், இந்த மாதம் 24 ஆம் வெளியாக இருக்கிறது. என்.டி.ராமாராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் கதைகள் பட மாக்கப்பட்டு ரிலீஸ் ஆயின. இன்னும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்பட சில அரசியல் தலைவர்களின் வாழ்க்கை கதை சினிமாவாக்கப் பட்டு வருகிறது. இதற்கிடையே, சஞ்சய் காந்தியின் வாழ்க்கை கதையும் சினிமாவாகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தி, விமான விபத்தில் 1980 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது வாழ்க்கை கதையை பிரபல இந்திப் பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர் தயாரிக்கிறார்.
படத்துக்கு ’த பிரின்ஸ்’ (The Prince) என்று டைட்டில் வைத்துள்ளனர். அக்ஷய் கண்ணா, சஞ்சய் காந்தியாக நடிக்க இருக்கிறார். அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.