கொரோனா தொற்று காலத்திலும் அக்‌ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ புதிய உலக சாதனை!

கொரோனா தொற்று காலத்திலும் அக்‌ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ புதிய உலக சாதனை!
கொரோனா தொற்று காலத்திலும் அக்‌ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’  புதிய உலக சாதனை!
Published on

கொரோனா வைரஸ் தொற்றின் போது இந்தியாவில் ஷூட்டிங் நடத்த தடை போடப்பட்டிருந்ததால், வெளிநாட்டில்  ஷூட்டிங் தொடங்கி முடித்த உலகின் முதல் படம் என்ற பெருமையை அக்‌ஷய் குமாரின் ’பெல்பாட்டம்’ பெற்றுள்ளது.

அக்‌ஷய் குமார் நடிக்கும் பெல்பாட்டம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றினால் மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த நிலையிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இங்கிலாந்தில் பெல்பாட்டம் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங்கை நடத்தச் சென்றனர்.  14 நாட்கள் தனிமைப்படுத்திகொண்டதோடு பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து இங்கிலாந்தில் பெல்பாட்டம் ஷூட்டிங் நடத்தப்பட்டது.

இதன்மூலம், கொரோனா தொற்றின் போது ஷூட்டிங் நடத்திய உலகின் முதல் படம் என்ற பெருமையைப் பெற்ற பெல்பாட்டம் படக்குழுவினர் தற்போது முழு படத்தையும் முழுமையாக இரண்டே மாதத்தில் முடித்துள்ளனர். இதனால், கொரோனா வைரஸின் போது தொடங்கி, அதற்குள்ளேயே முடித்த உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இன்று அக்‌ஷய் குமார், இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு ஷூட்டிங் முடிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தில், ஹீமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டவர்கள் அக்‌ஷய் குமாருடன் நடிக்கிறார்கள். ரஞ்சித் திவார் இயக்கியுள்ள பெல்பாட்டம் 1980 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ஸ்பை த்ரில்லர் படம். இப்படத்தில், தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com