பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள இயக்குநர் விஷ்ணு வர்தனை அழைத்து நடிகர் அஜித் பாராட்டியுள்ளார்.
அஜித் தமிழ் சினிமாவில் மிகவும் ஸ்டைலான நடிகர்களில் ஒருவர். ஆகவேதான் அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் அப்படி கொண்டாடுகின்றனர். எந்தவொரு சமூக ஊடகத்திலும் அஜித் இல்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் அவரைப் பற்றிய ஏதாவது தேடிப் பிடித்து ட்ரெண்ட் செய்து விடுகிறார்கள்.
சொல்லப்போனால் சமூக ஊடகம் இவரால் சுறுசுறுப்பு ஆக இருக்கிறது. அஜித் தனது ரசிகர்களுக்காகப் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார். ஆனால் 2007 ஆம் ஆண்டில் வெளியான அஜித்தின் 'பில்லா' படம் ரஜினிகாந்தின் மேஜிக்கை மீண்டும் திரைக்குள் உண்டாக்கியது.
இந்நிலையில் அந்தப் படத்தின் இயக்குநர் பற்றிய சுவாரஸ்யமான செய்தி கிடைத்துள்ளது. அது என்னவென்றால் பாலிவுட்டில் படம் பண்ண உள்ள இயக்குநர் விஷ்ணு வர்தனை அஜித், பாராட்டியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இயக்குநர் விஷ்ணு வர்தன் பாலிவுட்டில் 'ஷெர்ஷாஹ்’ படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த படம் ஜூலை 2020 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநரின் பாலிவுட் அறிமுகத்தைப் பற்றி அறிந்ததும், அவரை அழைத்து, தனக்கு இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் அஜித் கூறியுள்ளார். மேலும் இந்தி பட உலகிற்குத் தாமதமாகவே நீங்கல் சென்றுள்ளீர்கள் என்றும் அஜித் கூறியுள்ளார். உங்களுக்கு உறுதியாக நல்ல விஷயங்கள் நடக்கும் என்றும் கூறினார்.
இயக்குநர் விஷ்ணு வரதன் அண்மையில் அளித்த பேட்டியில் ஒன்றில் இதையெல்லாம் வெளிப்படுத்தியதுடன், அஜித்துடன் நல்ல ஆரோக்கியமான நட்பைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றும், அஜித் அதிக மரியாதைக்குரியவர் என்றும் கூறியுள்ளார்.
இயக்குநர் விஷ்ணு வர்தன் முதல்முறையாக 'பில்லா' படத்தில் அஜித்துடன் இணைந்தார். மேலும் இந்தப் படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையுடன் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை உருவாக்கியது. 'ஆரம்பம்' படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.