இளமை த்ரிஷா: வைரலாகும் செல்ஃபி

இளமை த்ரிஷா: வைரலாகும் செல்ஃபி
இளமை  த்ரிஷா: வைரலாகும் செல்ஃபி
Published on

நடிகை த்ரிஷா கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்திருக்கும் செல்ஃபி புகைப்படம்  வலைதளத்தில் தற்சமயம் வைரலாகி வருகிறது.

த்ரிஷா எப்போதும் ஸ்லிமான நடிகை. அவர் யோகா, எக்சர்ஸைஸ் என எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். சில வருடங்களாக அதிக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர் இப்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருக்கிறார். விஜய்சேதுபதியுடன் 96 படத்திலும் ஹரி இயக்கும் சாமி ஸ்கொயர் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். அரவிந்த் சாமியுடன் சதுரங்க வேட்டை படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர்  முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார். அவர் நிவின் பாலியுடன் சேர்ந்து ஹே ஜூட் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு மிக இளமையான தோற்றம். ஆகவே அவர் மணிக்கணக்காக உடற்பயிற்சி செய்து உடம்பை துரும்பாக இளைக்க செய்திருக்கிறார். 34 வயதான இவர் இந்தளவுக்கு இளமைக்கு திரும்பி இருப்பதை கண்டு ரசிகர்கள் வியந்து போய் இருக்கிறார்கள். அவர் இந்தப் படத்திற்காக கிக் பாக்சிங் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே அந்த வீடியோவும் வலைதளத்தில் வேகவேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com