சிம்ரன் இன்று தனது 43 பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைத்தளங்களில் அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பையில் பஞ்சாப் பெற்றோருக்கு மகளாக பிறந்து தமிழ்த் திரையுலகில் நிலைத்து நின்றவர் சிம்ரன். 1976-ம் ஆண்டு இதே நாளில் பிறந்த சிம்ரன், 1995ம் ஆண்டு ஹிந்தி படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் அவர் கால்பதித்த திரைப்படம் வி.ஐ.பி. இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃப்லிம் பேர் விருதும் சிம்ரனுக்கு கிடைத்தது. ஒருகட்டத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததை அறிந்த சிம்ரன் கோலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தினார். இதுதவிர தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
‘அவள் வருவாளா’, ‘நட்புக்காக’, கண்ணெதிரே தோன்றினாள்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘கண்ணுபட போகுதய்யா’ , ‘உன்னை கொடு என்னை தருவேன்’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘ கண்ணத்தில் முத்தமிட்டாள்’ என ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ‘சிம்ரன்போல் வருமா’ என சொல்லும் அளவிற்கு இன்றும் சிம்ரனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இடுப்பை வளைத்து ஆடுவதில் சிம்ரனுக்கு நிகராக வேறு எந்தவொரு நடிகையும் இன்னும் வரவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இந்நிலையில் சிம்ரன் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #HBDSimran என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.