நடிகை சரண்யா மோகனுக்கு பெண் குழந்தை!

நடிகை சரண்யா மோகனுக்கு பெண் குழந்தை!
நடிகை சரண்யா மோகனுக்கு பெண் குழந்தை!
Published on

நடிகை சரண்யா மோகனுக்கு, அழகானப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை அவர் கணவர் தெரிவித்துள்ளார். 

தமிழில் விஜய் நடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சரண்யா மோகன். பின் யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம் உட்பட பல படங்களில் நடித்த இவர், தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

இவருக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அரவிந்த் கிருஷ்ணனுக் கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மகன் பிறந்தான். அவனுக்கு அனந்த பத்ம நாபன் என்று பெயர் சூட்டினர். 

இந்நிலையில் சரண்யா மீண்டும் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ’அன்னப்பூர்ணா’ என்று பெயர் வைத்துள்ளனர். இத்தகவலை அரவிந்த் கிருஷ்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com