நடிகைகள் குறித்து ஆபாச, அவதூறு பேச்சு: காந்தராஜ், முக்தார் மீது நடிகை ரோகிணி புகாரின்பேரில் வழக்கு!

டாக்டர் காந்தராஜ் மற்றும் முக்தார் மீது, நடிகைகளை ஆபசமாக பேசியதாக நடிகை ரோகிணி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
நடிகை ரோகிணி - டாக்டர் காந்தராஜ் - முக்தார்
நடிகை ரோகிணி - டாக்டர் காந்தராஜ் - முக்தார்PT Web
Published on

கடந்த மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையானது வெளியாகி, மலையாள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துன்புறுத்தல் குறித்தான விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.

இதனையடுத்து, முன்னனி நடிகர்கள் பலரின் மீது பாலியல் புகார்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இது மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்தவகையில், மல்லுவுட் மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு சினிமாக்களிலும் பாலியல் சீண்டல்கள், தொல்லைகள் இருப்பதாக ராதிகா, குஷ்பு, விசித்திரா போன்ற சீனியர் நடிகைகள் சமீபத்தில் பேசியிருந்தனர்.

நடிகை ரோகிணி - டாக்டர் காந்தராஜ் - முக்தார்
"தப்பு பண்ற ஆம்பளையத்தான் தூக்கி வெச்சு கொண்டாடுறீங்க" - ஆதங்கத்தோடு சொன்ன ராதிகா சரத்குமார்!
குஷ்பு
குஷ்புமுகநூல்

இந்நிலையில், பிரபல சினிமா மற்றும் அரசியல் விமர்சகராக ‘அறியப்படும்’ மருத்துவர் காந்தராஜ் என்பவர், யூடியூப் சேனல் ஒன்றில், நடிகைகள் குறித்து ஆபாசமான கருத்துக்களை பேட்டியாக அளித்திருந்தார்.

அவை கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், காந்தராஜின் ஆபாசப்பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்சினிமாவின் விசாகா கமிட்டியின் தலைவரான நடிகை ரோகிணி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதார்.

தன் புகாரில், ‘நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் போல் சித்தரித்து இழிவாக காந்தராஜ் பேசியுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல்களைகூட, தவறான தொடர்பு என்பதுபோல பேசி கொச்சப்படுத்தியுள்ளார்’ என்று ரோகிணி தெரிவித்துள்ளார்.

நடிகை ரோகிணி - டாக்டர் காந்தராஜ் - முக்தார்
'அரசியல் இருக்காதுனு சொன்னாங்க.. ஆனா?'! தரமாக வெளிவந்த நடிகர் விஜய்யின் 69-வது பட அப்டேட்!

ரோகிணி அளித்த புகார் விவரம்:

புகாரில், “MY INDIA 24X7 என்ற YOU TUBE சேனலில் பொதுமக்கள் பார்வைக்கு ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளனர். அதில் பேசியுள்ள காந்தராஜ் அவர்கள் நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளிகள் என்று பேசியுள்ளதை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். இந்தப் பேட்டி சினிமாத்துறை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் உள்ளது.

மறைந்த நடிகைகள் மஞ்சு அவர்கள், ஜெயலலிதா அவர்கள் முதல் தற்போது புகழில் உள்ள ஷகிலா அவர்கள் வரை எடுத்துகாட்டாக கூறி அவர்களுடைய வாழ்க்கை நடத்தை என தனக்கு சம்மந்தமில்லாத, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பேட்டியளித்ததோடு...

அதன் மூலமாக நடிகைகள் என்றாலே சினிமாவில் கேமெராமேன், எடிட்டர், மேக்கப்மேன், டைரெக்டர் என விருப்பப்படுகின்ற அனைவரிடமும் "Adjustment" என்ற பெயரில் பாலியல் தொழில் செய்துதான் நடிக்க வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது போல் கூறியதோடு, மேடை நாகரீகமோ அல்லது சமூக பொறுப்போ இல்லாமல் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் பேசி, அதில் அலங்காரத்திற்காக நாக்கூசும் வார்த்தைகளையும் வசனங்களையும் பேட்டி என்ற பெயரில் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது பெண்களை அதிலும் சினிமாத்துறை சார்ந்த ஒட்டு மொத்த பெண்களையும் ஏளனமாகவும் பாலியல் தொழில் செய்பவர்களாகவும் சித்தரித்துள்ளது குற்ற செயலாகும்.

நடிகை ரோகிணி - டாக்டர் காந்தராஜ் - முக்தார்
”எனக்கும் இதுபோன்று ஒரு பிரச்னை வந்தது; நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கல” - நடிகை விசித்திரா

மேலும் காந்தராஜ் அப்பேட்டியில், ‘சினிமா உள்ளார வரும் போது இந்த Adjustment எல்லாம் பண்ணிதான் வருவாங்க’ என்பது தொடங்கி பல ஆபாச, அநாகரீக, ஆதாரமற்ற குற்றசாட்டை சினிமா நடிகைகள் மீது சுமத்தியதோடு, அனைத்து நடிகைகளையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளது, தண்டனைக்குரிய குற்ற செயலாகும்.

ரோகிணி அளித்த புகார்
ரோகிணி அளித்த புகார்

இப்பேச்சுக்காக இந்நபர் தண்டிக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஆதாரமில்லாமல் சமூக வலைதளங்களில் புகழ் தேடும் கும்பல்களை கட்டுபடுத்த கூடும் என்று எண்ணுகிறோம். மேலும் மருத்துவர் காந்தராஜ் தன் வயதிற்கும் கல்வித்தகுதிக்கும் சம்பந்தமே இல்லாதவாறு நடிகைகளின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததும் தண்டனைக்குரிய குற்ற செயலாகும்.

நடிகை ரோகிணி - டாக்டர் காந்தராஜ் - முக்தார்
பாலியல் துன்புறுத்தல்|“முயலுக்கு மூன்று கால் என சினிமா துறையை மட்டும் பிடித்துக்கொள்வது ஏன்?”-குஷ்பு

பெண்களை போதை பொருட்களாக பாவிக்கும் எண்ணம் உருவாகும் வகையில் காந்தராஜ் பேச்சு அமைந்துள்ளது. மேலும் பணத்திற்காகவும் புகழிற்காகவும் சினிமாத்துறை சார்ந்த பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது வளர்ந்துவரும் சினிமா சார்ந்த நடிகைகளின் வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடும்.

ரோகிணி அளித்த புகார்
ரோகிணி அளித்த புகார்

மேலும் நடிகைகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்படவும், இனிவரும் காலத்தில் பாலியல் குற்றசாட்டை வெளியில் சொல்ல கூட அச்சப்பட்டு நடிகைகள் பெறும் பாதிப்பு அடைவதோடு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, மேற்படி சினிமாத்துறை சார்ந்த பெண்களின் மீது எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி இழியாக பேசி, சமூக வலைதளத்தில் பதிவு செய்த மேற்படி MY INDIA 24x7 என்ற சேனலுக்கு பேட்டி அளித்தமைக்கு மருத்துவர், காந்தராஜ் மீது குற்ற வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேற்படி MY INDIA 24X7 என்ற சேனலில் பதிவேற்றப்பட்ட பேட்டியை YOUTUBE-ல் இருந்து நீக்க உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றுள்ளார்.

ரோகிணி அளித்த புகார்
ரோகிணி அளித்த புகார்

இதனடிப்படையில், மருத்துவர் காந்தராஜ் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமத்தில் போன்றவை உட்பட மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை ரோகிணி - டாக்டர் காந்தராஜ் - முக்தார்
இயக்குநர் சங்கத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் நிதியுதவி! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com