பாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி

பாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி
பாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி
Published on

நடிகர் சண்முகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரை சில மணி நேரங்களிலேயே நடிகை ராணி வாபஸ் பெற்றார்.

நடிகர் விக்ரம் நடித்த‘ஜெமினி’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு’ பாடல் மூலம் பிரபலமானவர் ராணி. அதற்கு முன்னரே ‘நாட்டாமை’ படத்தில் டீச்சராக நடித்து தமிழ் திரையுலகில் இடம் பிடித்தவர் இவர். #MeToo மூலம் தற்போது பல பிரபலங்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை புகாராக கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ‘விருமாண்டி’,‘காளை’,‘மாரி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் குணச்சித்திர நடிகரான சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ராணி புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்குன்றத்தில் உள்ள துணிக்கடை ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அவர் சென்றுள்ளார். விளம்பரத்தில் ராணியுடன் சண்முகராஜனும் இணைந்து நடித்ததாகக் கூறப்படுகிறது. 

படப்பிடிப்பின் போது சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை அவர் தாக்கியதாகவும் நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான செய்திகள் பரவியது. ஆனால் புகார் கூறிய சில மணி நேரங்களில் நடிகை ராணி புகாரை வாபஸ் பெற்றார். கருத்துவேறுபாடுகளை களைந்து சமரசம் ஏற்பட்டு விட்டதாக நடிகர் சன்முகராஜன் தெரிவித்தார். 

ஏற்கெனவே #MeToo விவகாரத்தில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் கிளம்பி வருகிறது. குறிப்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மீதும் புகார்கள் தொடர்கின்றன. கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்துள்ளார். தன்மீது வழக்கு தொடர்ந்தால், சந்திக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com