நடிகை ரம்பாவுக்கு ஆண்குழந்தை

நடிகை ரம்பாவுக்கு ஆண்குழந்தை
நடிகை ரம்பாவுக்கு ஆண்குழந்தை
Published on

தமிழில் ‘சுந்தர புரு‌ஷன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்துள்ளார். 

இவருக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் லாண்யா என்ற மகளும் 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர். ரம்பாவுக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு தயாராவதாக செய்திகள் வெளியாயின. ஆனால் குடும்பத்தினர் சமரசம் பேசி மீண்டும் சேர்த்து வைத்தனர்.

இதையடுத்து கணவருடன் கனடா சென்ற அவர் 3வது முறையாக கர்ப்பமானார். கனடாவில் அவருக்கு வளைகாப்பு சீமந்தம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரம்பாவுக்கு நேற்று முன் தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கனடாவின் டொரன்டோவில் உள்ள மவுன்ட் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதை ரம்பா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com