‘ஜவான்’ படத்துக்காக ‘தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது’ பெற்ற நடிகை நயன்தாரா!

2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது நடிகை நயன்தாராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தாதா சாகிப் பால்கே சர்வதேச விருது - நயன்தாரா
தாதா சாகிப் பால்கே சர்வதேச விருது - நயன்தாராமுகநூல்
Published on

2024 ஆம் ஆண்டிற்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா, மும்பையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், கரீனா கபூர் கான், ராணி முகர்ஜி, ஷாஹித் கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த விமர்சகர், சிறந்த வில்லன் நடிகர் என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது - நயன்தாரா
தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது - நயன்தாரா

ஜவான் படத்திற்காக ‘தாதா சாகிப் பால்கே சர்வதேச விருது’ பெற்ற நயன்தாரா

அந்தவகையில் பான் இந்தியா படமாக வெளியான ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது நடிகை நயன்தாராவிற்கு கிடைத்துள்ளது.

தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது - நயன்தாரா
தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது - நயன்தாரா

ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த அட்லீயின் முதல் இந்தி திரைப்படம்தான் ஜவான். இது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியானது.

இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, சஞ்சய் தத் என பலர் நடித்துள்ளனர். வெளியாகி 17 நாட்களிலேயே 1000 கோடி வசூல் ஈட்டிய இத்திரைப்படம், பல தமிழ்ப்படங்களின் கலவையாக இருப்பதாக விமர்சனங்களையும் பெற்றது.

தாதா சாகிப் பால்கே சர்வதேச விருது - நயன்தாரா
“Copy அடித்து படம் எடுத்தேனா?” - தொடர் விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ சொன்ன பதில்!
atlee, shah rukh khan
atlee, shah rukh khanpt web

இந்நிலையில் இப்படத்திற்காக சிறந்த கதாநாயகி விருதினை நடிகை நயன்தாரா பெற்றுள்ளது படக்குழுவினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல இப்படத்திற்காக ஷாருக்கானிற்கு சிறந்த நடிகருக்கான விருதும், அனிருத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் கிடைத்துள்ளன.

தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது - ஷாருக்கான்
தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருது - ஷாருக்கான்

இதையடுத்து தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் படக்குழுவுக்கும் நயன்தாரவிற்கும் அனிருத்துக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விருது விழாவில், சிறந்த இயக்குநராக ரன்வீர் - ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி பெற்றுள்ளார்.

தாதா சாகிப் பால்கே சர்வதேச விருது - நயன்தாரா
ஸ்வஸ்திக் சின்னம்,நாஜிக்களின் உடல்மொழி; பாசிசத்தை பிரதிபலிக்கும் அனிமல் எனும் அபாயம்! மனிதம் எங்கே?

சிறந்த நடிகைக்கான விருதை, Mrs Chatterjee vs Norway-க்காக ராணி முகர்ஜியும் பெற்றுள்ளார். சிறந்த நடிகர் (விமர்சகர்கள் விருது), விக்கி கௌஷலுக்கு சாம் பஹதூருக்காக கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லன் நடிகருக்கான விருது, அனிமல் படத்தில் நடித்த பாபி தியோலுக்கு தரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com