விஜய் இயக்கத்தில் உருவாகும் ’தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக, நடிகை கங்கனா ரனவ்த் நடிக்கிறார்.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று சினிமாக்களை எடுப்பது இப்போதைய டிரென்ட். சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கைக் கதையை மூன்று பேர் தனித் தனிப்படமாக இயக்குகின்றனர். மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இயக்குவதாக அறிவித்திருந்தனர். பாரதிராஜாவும் அவர் வாழ்க்கை கதை யை படமாக்குவதாகக் கூறப்பட்டது.
பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதைக்கு ’த அயர்ன் லேடி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா வாக, நித்யா மேனன் நடிக்கிறார். வரலட்சுமி சசிகலாவாக நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
இந்நிலையில் விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இந்தி நடிகை வித்யா பாலனிடமு ம் கேட்கப்பட்டது. இந்நிலையில் கங்கனா ரனவ்த் நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர் தமிழில் ஏற்கனவே, ஜெயம் ரவி ஜோடியாக ’தாம்
தூம்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் கதையை ’பாகுபலி’ கதாசிரியரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பாவுமான விஜ யேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, ‘’முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவின் முக்கியமான தலைவர். அவர் வாழ்க்கைக் கதையை இயக்குவது மிகுந்த பொறுப்புணர்வு கொண்டது. அதோடு பெருமையானதும் கூட. அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஜெயலலிதாவாக, கங்கனா ரனவ்த் நடிப்பது பெருமையான விஷயம்’’ என்றார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி மீடியா நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தியில் படத்தைத் தயாரிக் கிறது.