நடிகை கௌதமி வருமானவரி வழக்கு : உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

நடிகை கௌதமி வருமானவரி வழக்கு : உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
நடிகை கௌதமி வருமானவரி வழக்கு : உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
Published on

நடிகை கௌதமி மூலதன ஆதாய வரியில் 25 சதவீதத்தை செலுத்தும் பட்சத்தில், அவரது ஆறு வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கும்படி வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கௌதமி தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு 4 கோடியே 10 லட்சம் ரூபாய் விற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டில்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11 கோடியே 17 லட்சம் என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், தனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுபட்டுள்ளதால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டாபாணி பிறப்பித்துள்ள உத்தரவில், மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கௌதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்கும்படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நான்கு வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்திவைத்த நீதிபதி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com