“சாதி, மதம் நம்பிக்கையால் அதிக அச்சம் ஏற்படுகிறது” - அமலாபால்

“சாதி, மதம் நம்பிக்கையால் அதிக அச்சம் ஏற்படுகிறது” - அமலாபால்
“சாதி, மதம் நம்பிக்கையால் அதிக அச்சம் ஏற்படுகிறது” - அமலாபால்
Published on

நிறம், சாதி, கலாச்சாரத்தை தவிர்த்து மனிதம் வளர்க்க அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். 

‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் ‘ஆடை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய நிலையில், பல்வேறு சர்ச்சைகளை தாண்டி ‘ஆடை’ படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நிறம், சாதி, கலாச்சாரத்தை தவிர்த்து மனிதம் வளர்க்க அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். மதம், சாதி நம்பிக்கையால் ஏராளமான அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். சமீபகாலமாக உலகில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

ஒருத்தரை ஒருத்தர் மனிதாக பார்க்க வேண்டும் என்ற செய்தி சமூகத்தில் பரவ வேண்டும். ஒரு உண்மையான மனிதம் எது என்பதை பெரும்பாலும் வயதான பிறகே நாம் உணர்கிறோம். இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படப்போகும் படங்கள் அனைவரையும் ஈர்க்கும் என நான் நம்புகிறேன். ‘மைனா’ படம் முதல் ‘ஆடை’ படம் வரை ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com