மக்களுக்கு சாதகமான முடிவை ரஜினி எடுப்பார்: நடிகர் விவேக்

மக்களுக்கு சாதகமான முடிவை ரஜினி எடுப்பார்: நடிகர் விவேக்
மக்களுக்கு சாதகமான முடிவை ரஜினி எடுப்பார்: நடிகர் விவேக்
Published on

மக்களுக்கும், ரசிகர்களுக்கும் சாதகமான முடிவை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நான்காவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது
பேசியவர், இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது என பேசத் தொடங்கியதும் அரங்கமே அதிர்ந்தது. அவர் ஏதாவது சூசகமாக
தெரிவிப்பார் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு உங்களை இனி எப்போது சந்திப்பேனோ ‘மிஸ் யூ’ என கூறினார். அத்துடன் சினிமா
ஆனாலும், அரசியல் ஆனாலும் காலமே மிக முக்கியம், காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும் என்று தெரிவித்தார்.
ரசிகர்களுடனான இந்தச் சந்திப்பின் முதல் நாள் அன்று பேசிய ரஜினி, தனது அரசியல் குறித்த கருத்தை 31ஆம் தேதி
அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ரஜினியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக், மக்களுக்கும், ரசிகர்களுக்கும் சாதகமான
முடிவை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அத்துடன் 1996ல் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவார் என
அனைவரும் எதிர்பார்த்து வருவதாகவும், லஞ்சம் இல்லா, ஊழல் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்
மக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசை எதிர்பார்க்காமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏரி,
குளங்களை தூர்வார முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com