மிரட்டலான மேக்கிங்கால் கவனம் ஈர்க்கும் விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' ட்ரெய்லர்

மிரட்டலான மேக்கிங்கால் கவனம் ஈர்க்கும் விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' ட்ரெய்லர்
மிரட்டலான மேக்கிங்கால் கவனம் ஈர்க்கும் விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' ட்ரெய்லர்
Published on

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால்-மஞ்சிமா மோகன் நடித்துள்ள ’எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கெளதம் மேனன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் வெளியாவதையொட்டி தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. அபுபக்கர் அப்துல்லா என்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக கவனம் ஈர்க்கிறார் விஷ்ணு விஷால்.

’அபுபக்கர் அப்துல்லா திரும்ப இந்தியா வந்தான்னு சொல்றாங்க. அவன் அடுத்தது என்ன ப்ளான் பண்றான். அபுபக்கருக்கு உடந்தையா இங்க ஆப்பரேட் பண்றவங்க யார்மேலயாவது சந்தேகம் இருக்கா? ’அவன் எங்கப் போறான்? என்ன பண்றான்னு எங்களுக்குத் தெரியணும்?’... உங்கப் பையன் பண்ணது திருட்டு இல்ல மேடம் தீவிரவாதம். டெர்ரரிஸ்ட்’ என்று வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் இஸ்லாமியர்களை இந்தச் சமூகமும் காவல்துறையும் ஊடகங்களும் எப்படி அணுகுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இஸ்லாமியராக கவனம் ஈர்ப்பது விஷ்ணு விஷால் மட்டுமல்ல. மேக்கிங்கும் மிரட்டுகிறது. இசையமைப்பாளர் அஷ்வத்தின் பின்னணி இசையும் கூடுதல் மிரட்டலாய் அமைந்து ட்ரெய்லரை ரிப்பீட் மோடில் பார்க்க வைக்கின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com