நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை ஆதரவற்றக் குழந்தைகளுடனும் முதியோர் இல்லத்திலும் கொண்டாடி சிறப்பித்துள்ளார்.
தமிழின் முன்னணி நடிகரான விஷால் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து நிஜத்திலும் ஹீரோ என்பதை நிரூபித்து வருகிறார். கொரோனா ஊரடங்கிலேயே சென்னை முழுக்க வீதிகளில் வசிப்பவர்களுக்கு தினமும் உணவு வழங்கி பேருதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று 44 வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஷால் பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கம் மெர்சி ஹோமில் உள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கியும், கெல்லீஸ் பகுதியில் உள்ள சுரபி இல்லத்தில் கேக்வெட்டி குழந்தைகளுடன் உணவு அருந்தியும் மகிழ்ந்தார். அதோடு, குழந்தைகளோடு தரையில் அமர்ந்து குழந்தைகளுக்கு ஆசையுடன் உணவு ஊட்டிவிட்டு மகிழ்வித்தார்.
இந்த நிகழ்வில் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட், மத்திய சென்னை மாவட்ட தலைவர் சீனு, தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா மற்றும் மக்கள் நல இயக்கத்தின் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.
மேலும், விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் விஷால் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுக்க மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மூலம் முதியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்குதல்,பெண்களுக்கு தையல் மிஷின், தண்ணீர் அரிசி மூட்டைகள் வழங்குதல், ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் குன்றியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குதல், சாலையோரம் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிபவர்களை மீட்டு சுத்தப்படுத்தி முதியோர் மற்றும் மன நலம் குன்றியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற செயல்பாடுகளுடன், மக்களுக்கு பயனடையும் வகையில் நல திட்ட உதவிகளும் செய்து வருகிறார்கள்.