“முடிய எடுக்க சொன்னார்.. கோமணம் கட்ட சொன்னார்.. பயங்கரமான பயம் இருந்தது” - விக்ரம் நெகிழ்ச்சி!

”சில டைரக்டர்ஸ் நம்பி செஞ்சிரலாம். ரஞ்சித்த நம்பி செஞ்சேன். கோமணம் சின்னதா இதுக்குனு சொன்னார். அப்புறம் கூச்சமா இருந்தது அப்படியே அவங்க உலகத்துக்குள்ள இழுத்து போயிட்டார்” - விக்ரம்
விக்ரம்
விக்ரம்pt web
Published on

”கஷ்டப்பட்டு நடிச்சோம் வெற்றியை கண்டுபிடிச்சோம்”

நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் தங்கலான். ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், தங்கலான் திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் விக்ரம், “ரொம்ப ரொம்ப சந்தோஷம். நிறைய விஷயங்கள் மனசுல இருக்கு. படம் ஆரம்பிக்கும் போது மக்கள் கஷ்டப்பட்டு தங்கத்தை தேடுறாங்க. போராடி வாங்கினாங்க. நாங்களும் கஷ்டப்பட்டு நடிச்சோம். எங்க தங்கலான் குடும்பம் கஷ்டப்பட்டு உழைச்சோம். வெயில் குளிர் இடையே இந்த வெற்றியை கண்டு பிடிச்சோம்.

விக்ரம்
லிப்ஃட் கேட்ட மாணவி.. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபர்.. பெங்களூருவில் அதிர்ச்சி!

ரஞ்சித் ஆதாமா நடிக்க சொன்னாக்கூட நடிச்சிடுவேன்

ரஞ்சித் என்னை மீட் பண்ணும் போது வித்தியாசமா பண்ணலானு கதை சொன்னார். பர்ஸ்ட் முடியை எடுக்க சொன்னார், கோமணம் கட்ட சொன்னார். பயங்கரமான பயம் இருந்தது; ஸ்க்ரீன்ல எப்படி தெரியிம்னு. இன்னொரு பக்கம் கரெக்ட்டா பண்ணிட்டா சரியா இருக்கும்னு தோணிச்சு. ரஞ்சித் ஆதமா நடிக்க சொன்னா கூட நடிச்சிருவேன்.

சில டைரக்டர்ஸ் நம்பி செஞ்சிரலாம். ரஞ்சித்த நம்பி செஞ்சேன். கோமணம் சின்னதா இதுக்குனு சொன்னார். அப்புறம் கூச்சமா இருந்தது அப்படியே அவங்க உலகத்துக்குள்ள இழுத்து போயிட்டார். ரஞ்சித் நீங்க இல்லமா என்னால இந்த கேரக்டர் பண்ணியிருக்கவே முடியாது. படத்தில் நடிச்சவங்க எல்லோருமே.

ஜனரஞ்சகமான படம் எல்லோரும் பண்ணிட்டு போயிரலாம். பட் கன்டென்ட் படத்தை கமர்சியல் படமாக்குறது கஷ்டம். ரஞ்சித்... நன்றி. எனக்கும் என் இயக்குநர்களுக்கும் பெரிய ஒற்றுமை இருக்கும். பாலா ஆரம்பிச்சு இப்போ ஆனந்த் வரைக்கும் சினிமா மீறிய நட்பு இருக்கும். வேலை செய்யும் போது சீரியஸா இருப்போம் புரொமோஷன்ஸ் அப்போ ஜாலியா இருந்தேன். உங்க மெட்ராஸ் படத்திலிருந்து உங்க கூட நடிக்க ணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.

விக்ரம்
மத்தியப்பிரதேசம் | மருத்துவர் கண்முன்னே ஏற்பட்ட மாரடைப்பு... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

ரசிகர்களுக்கு சமர்பிக்கிறேன் 

கோப்ரா எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. ஆனா சரியா போல.. சில நேரங்களில் சில விஷயங்கள் சரியாக போகாது. ஆனா, அந்த படத்துல சில காட்சிகள்ல நல்லா நடிச்சிருப்பேன். அந்த படம் சரியா போல. படம் வெற்றி அடஞ்சா மட்டும்தான் மக்கள் கிட்ட போகும்.. இப்போ டிமாண்ட்டி காலனி நல்லா போயிட்டு இருக்கு. நம்ம கோப்ரலா விட்டதா இப்போ சரி பண்ணிட்டோம் அஜய்.

தங்கலான்
தங்கலான்web

மகான் ஓடிடில விட்டாங்க. ஓடிடி ல நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. என் மகன் கூட நடிச்ச பர்ஸ்ட் படம். எல்லோரும் இப்போ இதை பத்தி பேசுறாங்க. பார்ட் 2 கேட்குறாங்க. ஐ ஹாப்பி. தங்கலான் ரசிகர்களுக்கு சமர்பிக்கிறேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com