நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்!

நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்!
நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்!
Published on

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற நடிகர் விஜயராஜ் மாரடைப்புக் காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 43.

பழனியை சேர்ந்தவர் விஜயராஜ். இவர் சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்த இவர், சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’, ’நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமானார். திருமுருகன் இயக்கிய ‘எம்மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார்.

தீபாவளி பண்டிக்கைக்காக இரண்டு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான பழனிக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றார். இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது மறைவைக் கேட்டு சின்னத்திரை கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com