The GOAT Movie Trailer
The GOAT Movie Trailerpt

’மருதமலை மாமணியே முருகையா..’! ஆக்சன், காமெடி, எமோசன் என ஃபுல்-பேக்கேஜாக கலக்கும் GOAT ட்ரெய்லர்!

செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நடிகர் விஜய்யின் தி கோட் படத்தின் ட்ரெய்லர் அட்டகாசமாக வெளியாகியுள்ளது.
Published on

நடிகர் வெங்கட் பிரபுவின் சினிமா மேக்கிங் ஸ்டைலை அதிகம் விரும்பக்கூடியவர் நடிகர் விஜய். பஞ்ச் டயலாக் பேசுறது, பாஞ்சி பாஞ்சி சண்டை போடுறது எல்லாம் விட்டுட்டு ஜாலியா ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எப்போதும் விஜய்க்கு உண்டு. அதனால் தான் மங்காத்தா திரைப்படம் வெளியானபோது கூட, வெங்கட் பிரபுவுக்கு ஃபோன் செய்த விஜய் அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் நானே நடிச்சிருப்பேனே என்று கூறியதாக இயக்குநரே வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோல டைம் லூப் கான்சப்டில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு காம்பினேஷனில் வெளியான மாநாடு திரைப்படத்தின்போது கூட வெங்கட் பிரபுவை அழைத்து விஜய் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில்தான் ரசிகர்கள் மட்டுமில்லாமல் விஜய், வெங்கட் பிரபு இருவராலும் எதிர்பார்க்கப்பட்ட காம்பினேஷன் ஆனது கடைசியாக 'The Greatest of all time' (The GOAT) திரைப்படம் மூலம் பூர்த்தியாகியுள்ளது.

படம் அஜித்திற்கு கொடுத்த மங்காத்தாவைபோல வெற்றியடையுமா என்ற எதிர்ப்பார்ப்புடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, படம் மங்காத்தாவை விட பலமடங்கு வெற்றியடைய வேண்டும் என நடிகர் அஜித்குமார் வாழ்த்தியதாக சமீபத்தில் வெளியான செய்தி பெரும்மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோட் படம்
கோட் படம்x

இந்நிலையில் விஜயின் DE Aging கெட்டப், எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத பாடல்கள் என நெருடலுடன் எப்படி படம் வரப்போகிறது என ட்ரெய்லர் வெளியீட்டுக்காக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, வெங்கட் பிரபு ட்ரெய்லரின் மூலம் ஒரு பவர்ஃபுல் ட்ரீட் கொடுத்து அனைத்து தரப்பு விஜய் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

The GOAT Movie Trailer
‘ரஹ்மானுக்கு விருது கொடுக்காதது அவமானம்’-9 விருதுகளை அள்ளியும் ஆடுஜீவிதம் இயக்குநர் கடும் அதிருப்தி!

கில்லி, துப்பாக்கி, மங்காத்தா, மாநாடு.. இது விஜய்-வெங்கட் பிரபு ட்ரீட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து உருவாகியிருக்கும் படம் 'The Greatest of all time' (The GOAT). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம் கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், செப்டம்பர் 5ம் தேதி திரையில் வெளியாகவிருக்கிறது.

G.O.A.T திரைப்படம்
G.O.A.T திரைப்படம்PT

பல நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் படத்தின் மீதான அதிக எதிர்ப்பார்ப்புடன் இருந்த விஜய் ரசிகர்கள் ’ட்ரெய்லர் எங்க யா’ என இயக்குநர் மற்று தயாரிப்பாளரை டேக் செய்து கேட்கும் அளவுக்கே சென்றுவிட்டனர். ”சிறந்த வெர்சனை கொடுக்க நினைக்கிறோம், தயவுசெய்து பொறுமை காக்கவும்” என கூறிய படக்குழு, இப்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

the goat
the goat

தி கோட் படத்தின் ட்ரெய்லரானது பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. “அண்ணன் வரார் வழிவிடு” என தொடங்கும் ட்ரெய்லர் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான சின்ன சின்ன சர்ப்ரைஸ் எலெமண்ட்கள் நிரம்பி வழிகின்றன.

இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது, மருதமலை மாமணியே முருகையா, வயசானாலும் சிங்கம் சிங்கம் தான், No One Can Stop Me" போன்ற வசனங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள், துப்பாக்கி, மங்காத்தா, கில்லி என விஜய்-அஜித் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்க்கு ஒரு தரமான வில்லனாக மோகன் ஜொலிக்கிறார்.

ட்ரெய்லர் மொத்தமும் காமெடி, எமோசன், ஆக்சன், பழைய படங்களின் எஃபெக்ட் என ஒரு புல்பேக்கேஜாக வெளிவந்துள்ளது. விஜய் ரசிகர்கள் ட்ரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.

The GOAT Movie Trailer
அதிகப்படியான பாசிட்டிவ் ரிப்போர்ட்.. தங்கலான் பாகம் 2 குறித்து அப்டேட் சொன்ன விக்ரம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com