''யுரேனியத்தை வாங்கலாம்; காட்டை வாங்க முடியுமா?'' - விஜய் தேவரகொண்டா

''யுரேனியத்தை வாங்கலாம்; காட்டை வாங்க முடியுமா?'' - விஜய் தேவரகொண்டா
''யுரேனியத்தை வாங்கலாம்; காட்டை வாங்க முடியுமா?'' - விஜய் தேவரகொண்டா
Published on

நல்லமல்லா காடுகளில் யுரேனியம் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நடிகர் விஜய் தேவரகொண்டா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

ஆந்திராவின் நல்லமல்லா காடுகளில் யுரேனியம் எடுக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ஆந்திராவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நல்லமல்லா காடுகளில் யுரேனியம் எடுத்தால் அதன் அருகேயுள்ள கிருஷ்ணா நதி நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும் என மக்கள் அச்சமடைகின்றனர். ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு கிருஷ்ணா நீர் மிகவும் இன்றியமையாததாக இருக்கும் நிலையில் யுரேனியம் திட்டம் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் #SaveNallamalaForest, #StopUraniumMining ஆகிய ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து இணையவாசிகள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ஆந்திராவின் திரை நட்சத்திரங்கள் பலரும் நல்லமல்லா காடுகளுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர். அதன்படி ஆந்திராவின் இளம் நடிகரான விஜய் தேவரகொண்டா யுரேனியம் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ''நாம் ஆறு, குளங்களை அழித்து வருகிறோம். நீர்நிலைகளை மாசுபடுத்துகிறோம். இவற்றையெல்லாம் நியாயப்படுத்திக்கொண்டிருக்க, அதன் வரிசையில் தற்போது நல்லமல்லா காடும் இணைந்துவிட்டது. யுரேனியம் வேண்டுமென்றால் வாங்குங்கள், அதற்காக காட்டை அழிக்க கூடாது. யுரேனியத்தை வாங்க முடியும். காட்டை வாங்க முடியுமா?

மின்சாரம் தேவையெனில் அதனை வேறு வழியில் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். சோலாரை பயன்படுத்தலாம். அதனை கட்டாயமாக்கலாம். சுவாசிக்க காற்றும், குடிக்க நீரும் இல்லாமல் நாம் இருக்கும் போது, யுரேனியமும், மின்சாரமும் எதற்கு?'' என கேள்வி எழுப்பியுள்ளார். 

தேவரகொண்டா மட்டுமின்றி, பவன்கல்யாண் உள்ளிட்ட பலரும் நல்லமல்லா காடுகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com