"எல்லோரோடும் இனிமையாகப் பேசிப் பழகுபவர் தவசி மாமா" - சீமான் உருக்கம்

"எல்லோரோடும் இனிமையாகப் பேசிப் பழகுபவர் தவசி மாமா" - சீமான் உருக்கம்
"எல்லோரோடும் இனிமையாகப் பேசிப் பழகுபவர் தவசி மாமா" - சீமான் உருக்கம்
Published on

”எனது அன்புக்குரிய மாமா தவசி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியது.

நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் அப்பாவாக தவசியின் 'கருப்பன் குசும்புக்காரன்' காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

சமீப காலமாக உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவருக்கு இலவச சிகிச்சை அளித்து பேருதவி புரிந்தார்,  திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தது.

அதன்பிறகு, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, ரோபோ ஷங்கர் உள்ளிடோர் உதவினார்கள். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு தவசி உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில,  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது அன்புக்குரிய மாமா தவசி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மறைவுற்றார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த் திரைத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். மதுரை வட்டார மொழியில் மண்ணின் மணம் கமழ எல்லோரோடும் இனிமையாகப் பேசிப் பழகும் மாமா தவசி அவர்கள் தனது அசாத்திய நடிப்பாற்றல் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவராவர். அவரது திடீர் மறைவுச்செய்தி இதயத்தைக் கனக்கச் செய்கிறது. மாமாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்” என்று உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com