செய்தியாளர்: லெனின்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாச ஹாலில், தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.சோமசுந்தரம் தலைமையில், கவிஞர் வாலி அவர்களின் 93 வது பிறந்தநாள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞர் வாலி, நடிகர் பிரபுவுக்கு எழுதிய திரை இசை பாடல் தொகுப்பை நடிகர் தம்பி ராமையா வெளியிட்டு பேசினார். அப்போது...
அப்போது பேசிய அவர்... “அனைவரும் உங்களது வீட்டில் உள்ள
* 60 வயதை கடந்த முதியவர்களிடம் நேரம் ஒதுக்கி பேரக் குழந்தைகளை பேசி பழகவிடுங்கள் அப்படி செய்தால் உங்கள் வீட்டுக்கு கடவுள் வரப்போகிறார் என்று அர்த்தம்.
* 70 வயதை கடந்தவர்களின் தேவை அறிந்து அவர்களை கவனித்துக்கொள்ளுங்கள். கடவுள் உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.
* 80 வயது கடந்தவர்களின் சுருங்கிய தேகத்தை தடவிவிடுங்கள். கடவுள் நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே தங்கி விட்டார் என்று அர்த்தம்.
வயது முதிர்ந்தவர்கள் குழந்தைகளை போல திரும்பத் திரும்ப பேசிய ஒன்றையே பேசிக்கொண்டு இருப்பார்கள். அதனை எப்போதும் புதிதாக கேட்பது போல நினைத்து அவர்களோடு பேசி பழகுங்கள். அவர்களை தொட்டுத் தழுவுங்கள். இதைத்தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.