”என் ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்ற காத்திருக்கிறது” - சோனு சூட்

”என் ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்ற காத்திருக்கிறது” - சோனு சூட்
”என் ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்ற காத்திருக்கிறது” - சோனு சூட்
Published on

சோனு சூட் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறி ஒரு கிரவுட் ஃபண்டிங் தளத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து ரூ.2.1 கோடியை திரட்டியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளதற்கு நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.


அதில், “என்னுடைய ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது. நீங்கள் எப்போதும் உங்கள் பக்கத்தை சொல்லவேண்டியதில்லை. நேரம் வரும். நான் எனது முழு இதயத்துடன் இந்திய மக்களுக்கு சேவை செய்ய உறுதியளித்துள்ளேன். நான் ஒரு சில நாட்களாக சில விருந்திருனர்களை சந்தித்தேன். அதனால், தொடர் சேவையில் இருக்க முடியவில்லை. இதோ, இப்போது மீண்டும் சேவைக்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 பொதுமுடக்கத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகர் சோனு சூட். கோவிட் முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட அவரது லாப நோக்கமற்ற தொண்டு அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடை சேகரித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, அதில் ரூ.1.9 கோடி நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது, மீதமுள்ள ரூ.17 கோடி லாப நோக்கற்ற வங்கிக் கணக்கில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.சோனுசூட் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறிய பின்னர் வருமான வரித்துறை அவர் வீட்டில் சோதனை நடத்தியது குறித்து சிவசேனா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளன. ஆம் ஆத்மி கட்சியுடன் சோனு சூட் இணைவதற்கும் வருமான வரித்துறை சோதனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com