இயக்குநரின் திருமணம்: சர்ப்ரைஸாக வந்து தங்கச் செயின் அணிவித்த சிவகார்த்திகேயன்

இயக்குநரின் திருமணம்: சர்ப்ரைஸாக வந்து தங்கச் செயின் அணிவித்த சிவகார்த்திகேயன்
இயக்குநரின் திருமணம்: சர்ப்ரைஸாக வந்து தங்கச் செயின் அணிவித்த சிவகார்த்திகேயன்
Published on

இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து தங்கச் செயின் அணிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ரியோ ராஜ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தினை தயாரித்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தினை, இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருந்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலுக்கு கடந்த 15 ஆம் தேதி கோவையில் திருமணம் நடைபெற்றது. இதற்கு, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பிதழ் தரப்பட்டபோது ‘டான்’ படத்தின் வெளியீட்டுப் பணிகளில் பிஸியாக இருந்த சிவகார்த்திகேயன் ‘தன்னால் வரமுடியாத சூழல்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், திருமணத்தன்று சர்ப்ரைஸாக கோவைக்குச் சென்று மணமகன் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலுக்கு தங்கச் செயின் பரிசளித்து கழுத்தில் போட்டுவிட்டுள்ளார். அதோடு, திருமணத்திற்கு வந்தவர்களுடன் அமர்ந்து உணவருந்திவிட்டே திருமணம் முடியும் வரை இருந்துவிட்டுச் சென்றிருக்கிறார். சிவகார்த்திகேயன் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலுக்கு செயின் அணிவிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com